கருத்துமயக்கம்
பத்திரிகாதர்ம உத்தி: தேவைக்கேற்பச் செய்தியை வளைத்து வெட்டித்தைத்து வாசகரைக் கருத்துமயக்கி பத்திரிகை, அது விரும்பும் கருத்தினை மட்டுமே சரியெனத் தோற்றமாயை ஏற்படுத்துதல்
சிவராமின் கொலை குறித்து த இந்து பத்திரிகை எதிர்பார்த்தது போலவே செய்தி வெளியிட்டிருக்கின்றது.
மிகுதியான செய்திநிறுவனங்கள் சிவராம் பணி புரிந்த தமிழ்நெற் தளத்தினை "புலிகளுக்குச் சார்பான", "போராளிகளுக்குச் சார்பான" என்ற முன்னொட்டுடன் கூறி, சிவராமின் இறப்புக்கு அவருடைய விடுதலைப்புலிகளின் சார்பான கருத்துகளே காரணமாக இருக்கலாமென்பதையும் கூறியிருக்கின்றபோது, இது குறித்த த இந்துவின் எல்லாச்செய்திகளும் சொல்லப்படும் அவருடைய அண்மைக்காலப் புலிச்சார்பினை அப்படியே மறைத்துவிட்டு, அவருடைய PLOTE காலச்செயற்பாடுகளைமட்டும் சுட்டி, அது காரணமாகவும் கொல்லப்பட்டிருக்கலாமென்ற தொனியினை வாசகர்களுக்கு எழுப்பி, கூடவே புளொட் தலைவர் சித்தார்த்தனின் அனுதாபச்செய்தியையும் வெளியிட்டு என்றும் குறிப்பிடுகின்றன. புளொட்டுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே நெடுங்காலமாக இருக்கும் பகைமையை முன்னிறுத்தி, வாசகர்களுக்கு ஒரு தோற்றத்தினை ஏற்படுத்துவது ஒரு முயற்சி.
1. Abducted Tamil journalist found dead in Colombo
V.S. Sambandan
Saturday, Apr 30, 2005
//..Though the motive behind the murder is not known, he "could have made enemies all over" because of his PLOTE membership between 1980 and 1990 and commentaries as a journalist, a defence analyst said.
Mr. Sivaram, a former member of the People's Liberation Organisation of Tamil Eelam (PLOTE), gave up militancy over a decade ago and became a columnist, writing on defence and politics under the nom de plume, Taraki. //
2. Tamil scribe shot dead in Colombo
By V.S. Sambandan
//..A former member of the People's Liberation Organisation of Tamil Eelam (PLOTE), Sivaram had left the organisation a decade ago and took to writing defence and political columns in English and Tamil newspapers in Sri Lanka. He was also on the editorial board of the TamilNet website.//
அடுத்ததாக, இதே செய்தியில் (1) "தமிழ்நெற் தளத்தினை மிகவும் நடுநிலையாக இயங்கவைக்க முயற்சி செய்தவர்" ("During the past few years, he was also largely responsible for the content of the TamilNet website. More recently, he was keen that the Web site presented a balanced reportage.") என்று கூறுகின்ற அதே த இந்து அண்மைக்காலங்களிலே, தமிழ்நெற் குறித்து முரணாக எழுதியிருப்பதற்குச் சில உதாரணங்கள்:
1. Tamil rebels cancel tsunami aid meeting
Thursday, February 10, 2005 : 0300 Hrs
//The pro-rebel TamilNet Web site said a meeting between the rebels and World Bank and Asian Development Bank chiefs' had been postponed indefinitely.//
2. Bharathiraja moved by LTTE's 'sacrifices'
Sunday, December 5, 2004 : 1555 Hrs
//he was quoted as saying by pro-rebel Tamilnet website. "//
3.New Sri Lankan Government faces first test
By V.S. Sambandan
//"the pro-rebel Tamilnet website quoted the LTTE's new Batticaloa leader, Thambirajah Ramesh, as saying."//
தொடர்ந்து த இந்துவினையும் இலங்கைப்பிரச்சனையும் கவனித்து வரும் அவதானிகளுக்கு இப்படியாகச் சொற்களைத் தேர்தெடுத்து செய்தி தருவதால் தன்னை வாசிக்கும் வாசகர்களில் த இந்து பதிக்க முயலும் இரு கருத்தாக்கங்கள் தெளிவாகலாம்.
1. PLOTE இனைச் சேர்ந்திருந்த சிவராம் என்பவர் அவர் கருத்துகளுக்காக (பெரும்பாலும் PLOTE உடன் பகைமை கொண்ட குழுவினைச் சார்ந்தவர்களாற்) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்
2. நடுநிலைமையாக தமிழ்நெற் என்ற செய்தித்தளத்தினை நிர்வகிக்க முயன்றதும் அவர் கொலைக்குக் காரணமாகியிருந்திருக்கலாம்.
11 comments:
சிவராமுக்கு விழுகிற வாக்கரிசியைக் கூட பொறுக்கிதின்றுவிடும் போலிருக்கிறதே!
I expected this slant of news from The Hindu. I have not looked at today's paper yet.
This shows how consistently this paper has been presenting fabricated views, with very little opposition from other mainstream media.
thanks-ravi srinivas
இதைத் தவிர வேறெதை ஹிந்துவிடமிருந்து எதிர்பார்க்கமுடியும். ஆனால், இதைத் தாண்டி, எந்த தமிழ் தினசரியும் இந்த செய்தியினை தீவிரமாக அணுகவில்லை என்பதில், தமிழ்நாட்டில் இலங்கை சார்ந்த விஷயங்களுக்கான கவனகுறைபாடு அப்பட்டமாக தெரிகிறது.
நீங்க இவ்ளோ ஏழுதீட்டீங்களே, இன்னுமா இந்து பற்றி நம்ம மக்கள் சரியாப் புரிஞ்சுக்கல? இந்துவுக்கு சப்பைக்கட்டுகட்டும் மாலன் போன்ற இணைய தலைகள் இவற்றுக்கு என்ன சொல்கிறாங்கன்னு ஒருவாட்டி கேட்டுச் சொல்றீங்களா?
கருத்துகளுக்கு நன்றி.
தொடர்ச்சியாக இணையத்திலேனும் எல்லாத் தமிழ் பேசும் மக்கள் தொடர்பானதுமான பெரும்பத்திரிகை கோலியாத்துக்கு எதிரான டேவிட் இணைய சஞ்சிகைகள் வரவேண்டும் சாரா சுந்தரவடிவேலின் பதிவிலே கொடுத்த இணைப்பிலேயிருக்கும் சிவராமின் TamilNet ஏன் உருவானது என்ற செவ்வி சிறப்பாக இந்நிலையைச் சொல்கிறது
நன்றாக உடைத்துக் காட்டியிருக்கிறீர்கள்.
From killing to killing: Nirupama Subramanian
For Whom the Bells Toll!!
//From killing to killing: Nirupama Subramanian //
இதுதான் எரியிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் அப்படீன்னு சொல்றது!
எதை எங்கே கொண்டு போய்ச் செருகுவது என்கிற இந்து மாய்மாலத்தைக் காண ஆச்சரியமாய் இருக்கிறது. இதையெல்லாம் அப்படியே நம்புவார்கள் என்று எதிர்பார்த்து எழுதுகிறார்களா அல்லது நான் உன்னை முட்டாளாக்குறது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்ங்கற மாதிரியா?
நிருபமா சுப்பிரமணியனின் கருத்துப்பத்தியெழுத்துக்கு ஆதரவாக வழக்கம்போல ஒரு கடிதம் த இந்து ஆசிரியருக்கு வந்திருக்கின்றது. சிவராமினைத் புளொட்டினை சேர்ந்திருந்தவரும் பத்திரிகையாளரும் என்று மட்டுமே காட்டுவதைச் செய்கையாக வைத்துக்கொண்டு, இப்படியான ஆசிரிருக்கான கடிதங்களை மட்டும் ஏன் வெளியிடுகின்றார்கள் என்பது தெளிவு
LTTE's brutal ways
The article, `From killing to killing' (May 4), is aptly titled. It is only with an inexpressible sense of anger and pain that one can read of the fate that befell Rajani Thiranagama for having disagreed with the LTTE. Helene Klodawsky's film No More Tears Sister on Thiranagama's life and death should receive wider publicity to make more people aware of the true nature of the LTTE.
T.S. Pattabhi Raman,
Coimbatore, T.N.
Post a Comment