Wednesday, May 04, 2005

மீண்டும் மீண்டும்....

“Repeat a lie a thousand times and it becomes the truth.” - ஹிட்லரின் கொள்கைபரப்பு அமைச்சராக இருந்த ஜோஸப் கோயாபல்ஸ் சொன்னதாகச் சொல்லப்படும் மேற்படியான கூற்றினை த இந்துவின் வி. எஸ். சம்பந்தனின் நோக்கிலே மாற்றிச் சொல்வதானால், இப்படியாகச் சொல்லலாம்: “Hide a truth a thousand times and it becomes lie.”

சிவராமின் முன்னைய புளொட் சார்பினைச் சுட்டிச் சொல்லிக்கொண்டேயிருக்கும் சம்பந்தன், ராம்வோச்சர் சென்ற பதிவிலே சுட்டிக்காட்டியதுபோல, சிவராமின் பின்னைய புலி ஆதரவினை (அதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டிருக்கலாமென்று மீதிப் பெரும்பாலான ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றபோது) அப்படியே மறைத்துவிடுகின்றார்.

Media organisations condemn murder of journalist
V.S. Sambandan
Wednesday, May 04, 2005


ஆனால், அதேநேரத்திலே, தன் வழக்கமான "Military Analysts say" போன்ற பொதுவானதும் அநாமதேயமானதுமான மேற்கோளுக்கான கூற்றாளர் வரிசையிலே கீழ்வரும் செய்தியிலே சொல்லியிருப்பது இது:

"Reports said Sivaram's family had declined an LTTE request that his body be brought to the LTTE's political headquarters' in Kilinochchi as he had wanted "a simple funeral." "

இச்செய்தி உண்மையாக இருக்கக்கூடும். ஆனால், இச்சிறுசெய்தியினை முன்னிலைப்படுத்தும் சம்பந்தன், புளொட்டிலிருந்த சிவராம், த ஐலண்டில் எழுதிய தராக்கி இவற்றிலிருந்து நேரடியாகக் கொலைக்கும் புலிகளின் தளத்திலே சிவராமின் உடலை அஞ்சலிக்கு வைக்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டதையும் இணைப்பாக எழுதி இவ்விரு காலப்பகுதிகளுக்கும் இடைப்பட்ட காலத்திலே சிவராமின் நிலைப்பாட்டினையும் (அதுவே அவரின் கொலைக்குக் காரணமாகியிருக்கலாமென்ற கருத்தமைப்பையும்) திட்டமிட்டே மறைப்பதை, “Hide a truth a thousand times and it becomes lie” என்றன்றி வேறெப்படியாகச் சொல்லமுடியும்?

4 comments:

Thangamani said...

பிணத்தின் நெற்றியில் இருந்து காசைத் திருடித் தின்பதை ஈனர்களும் செய்யமாட்டர்கள். இழவே விழுந்தாலும் எப்படி எழுதி தனக்கு நல்லது செய்துகொள்ளமுடியும் என்று பார்ப்பதில் இந்தப் பத்திரிக்கைக்கு நிகர் இதுதான். முன்பு இதை சுனாமியின் போதும் செய்தது. உதவிகள் இன்றி கிழக்கில் தமிழர்கள் தவித்துக்கொண்டிருந்த போது அரசு உதவியதாக சொன்னதை அப்படியே பிரசுரித்தது.

இளங்கோ-டிசே said...

I read somewhere that Sivarams' body was in LTTE's Thenakam for viewing. Is it true or not?

Anonymous said...

ராம்வோச்சர் எழுதுவது

டி.ஜே. தமிழன் நீங்கள் மேற்படிச்செய்தி தன்னளவிலே சரியாக இருப்பதற்கான வாய்ப்புண்டு என்பதைக்கவனியுங்கள்; த இந்துவின் நோக்கம் எல்ரிரிஈ இற்கு மறுக்கப்பட்டது என்பதாகப் பிரகனப்படுத்துவதேயாகவும் இருக்கலாம். "எதற்கு மறுக்கப்பட்டிருக்கலாம்? எங்கு கொண்டு போய் வைக்க மறுக்கப்பட்டிருக்கலாம்? ஏன் மறுக்கப்பட்டிருக்கலாம்?" என்பதாகக் கேள்விகளை எழுப்பினால், நீங்கள் சொல்லும் மட்டக்கிளப்பிலே தேனகத்திலே சிவராமின் உடலை அஞ்சலிக்காக வைத்திருந்ததும் கிளிநொச்சி கொண்டுபோகாததும் தனியே பிரித்துப் பார்க்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், அது த இந்துவின் தேவைக்கு உதவாது என்பதைக் கவனியுங்கள். கொலைசெய்யப்பட்ட ஒரு பத்திரிகையாளரின் உடலை ஏன் விடுதலைப்புலிகள் கையேற்க முயற்சிக்கவேண்டும் என்பதை விளக்கமாக இதற்கும் மேலாகச் சுட்டி விளக்குவது, த இந்துவின் மறைநோக்குக்கு ஊறுவிளைவிக்குமென்பதாலே அது பற்றி விபரிக்காமல், வாசகர் மனதிலே சிவராமின் குடும்பம் அவரது உடலை எல்ரிரிஈ பொறுப்பெடுப்பதை விரும்பவில்லை என்பதுமட்டுமே பதிகின்ற விதத்திலே பத்திரிகைக்கோயாபல்ஸ்தனம் செய்திருக்கின்றது

இளங்கோ-டிசே said...

நன்றி 'ராம்'வாச்சர், விரிவான பதிலுக்கு (இப்பதான் இந்தப்புனைபெயரிற்கு காரணம் என்னவென்று எனது மூளைக்கு விளங்கியது :-). Me gonna become ChoWatcher soon ).
அவசரமாய்த்தான் இந்தப்பதிவை (நீங்கள் தந்த இணைப்புக்களை வாசிக்காமல்) வாசித்து பின்னூட்டமிட்டிருந்தேன். தேனகத்தில் புலிகள் இறுதி அஞ்சலிக்காய் சிவராமின் உடலை வைத்திருக்கின்றார்களே, அப்படியெனில் த இந்துவின் கூற்றே பிழைபோலத்தெரிகின்றதே என்று தோன்றத்தான், மேலேயுள்ளதைப் பின்னூட்டமிட்டிருந்தேன். எனினும் விளக்கத்துக்கு நன்றி.