தலையும் வாலும்
ஈழத்தின் கிழக்குப்பகுதியிலே ராஸிக் குழு என்ற தமிழ்க்குழுக்களின் உதிரிகளாலான குழுவொன்று இலங்கை இராணுவத்தின் துணைப்படையாகச் செயற்பட்டு வருகின்றது. மிகமிகக்குறைவான எண்ணிக்கையிலான முஸ்லீங்கள், பறங்கியர், யாவர், தமிழர்கள் ஆகியோரைத் தவிர்த்து, மிகுதிக்குச் சிங்களவர்களாலேயே நிரம்பியிருக்கும் இலங்கை இராணுவம் தமிழர்கள்மத்தியிலே செயற்படமுடியாத இடங்களிலே, சந்தர்ப்பங்களிலே இந்த ராஸிக் குழு இராணுவத்துக்கான தேவைகளையும் நோக்கங்களையும் பூர்த்திசெய்யப்பயன்பட்டுவருகின்றது. இதன் தலைவராகச் செயற்பட்ட காந்தி என்ற புனைபெயர்கொண்ட நவரட்ணராஜா சிவகுரு என்பவர் கொல்லப்பட்டிருக்கின்றார்.
இந்த நிகழ்வினை இந்து பத்திரிகையின் செய்தியாளர் சம்பந்தன் தந்திருக்கும் விதம் இலங்கையின் இராணுவ அமைப்பு பற்றித் தெரியாதவர்களுக்கு தவறான கருத்தினை ஏற்படுத்தலாம்.
The Hindu
Thursday, Sep 15, 2005
Sri Lankan Tamil soldier dies in grenade attack
V.S. Sambandan
COLOMBO: A member of the Sri Lanka National Guard, Sivaguru Navaratnarajah (38), was killed in an improvised grenade attack by LTTE cadres on Wednesday morning, the Sri Lanka Army said.
செய்தி என்று பார்க்கும்போது, சம்பந்தனின் செய்தியிலே தவறினைக் காணமுடியாது. ஆனால், அவரது செய்திக்குத் தரப்பட்டிருக்கும் தலையங்கம் வாசிப்பவருள்ளே கடத்த விரும்பும் கருத்தானது, "இலங்கையின் போர்வீரர் கொல்லப்பட்டார்" என்பது அல்ல, "இலங்கை இராணுவத்தின் தமிழ்ப்போர்வீரர் கொல்லப்பட்டார்" என்பதாகும். அதாவது, இந்தச்செய்தியின் மிகமுக்கியமாக உணர்த்தவிரும்பும் செய்தியாவது, "இலங்கை இராணுவத்திலே தமிழர்கள் உள்ளனர்" என்றதாகவே தோன்றுகின்றது.
அண்மைக்காலகட்டத்திலே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஜேவிபியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் கடிந்து த இந்து எடுத்து, எழுதி வரும் நிலைப்பாட்டினை முன்னிறுத்தி, த இந்துவின் நேர்மைத்திறனை நியாயப்படுத்தும் கட்டுரைகளை எண்ணப்போக்குகளை ஆங்காங்கே காண்கின்றோம். ஆனால், இப்படியான எண்ணப்போக்குள்ளோரினாலே, ராஜபக்ஸவுக்கு எதிரான நிலைப்பாட்டினை த இந்து எடுப்பதற்கான காரணம், ராஜபக்ஸ-ஜேவிபி இனது ஒப்பந்தமென்ற மேலோட்டமான கருத்தே அடிப்படையாகக் கொண்டிருப்பது குறித்த தவறான பார்வையை நாம் அலசவேண்டும். ராஜபக்ஸவுக்கு எதிரான நிலைப்பாடு என்பது சந்திரிகா+அண்மையிலே த இந்துவுக்குச் செவ்வியளித்த அவரது சகோதரரும் வெளிவிவகார அமைச்சருமான அநுரவுக்குமாக்கான ஆதரவுநிலைப்பாடு என்ற கோணத்திலான பார்வை இவர்களெவராலும் வைக்கப்பட்டாதது வருந்தத்தக்கதும் முழுமையான பார்வையற்றதுமாகும்.
அடுத்ததாக, முன்னாள் இந்திய மந்திரியான முனைவர். சுப்பிரமணிய சுவாமி Sep 19, 2005 இந்துவிலே ராஜீவ் காந்தியினைக் கொல்வதை 'எதிர்த்த' கருணா குழுவினைப் பற்றியெல்லாம் நிறைய அறிந்து எழுதியிருக்கும் "The LTTE shadow over India" கருத்துப்பந்தி தனியே கட்டுடைக்கப்படவேண்டியதாகும். இவ்விரு விடயங்கள் குறித்தும் வேறு சந்தர்ப்பங்களிலே பார்ப்போம்.
5 comments:
Highly venomous Hindu!!
Thanks for the links
-Ponnarmenian
'இந்துமா சமுத்திரப் பிராந்தியத்தில் மூன்றாம் கடற்படையாக உருவெடுத்திருக்கும் தமிழீழ கடற்படை'
இந்த சூரிய நாரயணன்களுக்கு கடலில் கொல்லப்படும் தமிழ் நாட்டுத் தமிழர்களைப்பற்றியோ, அவர்களை இந்த பிராந்திய வல்லரசின் கப்பற் படை காப்பாற்ற வக்கற்றிருப்பதைப்பற்றியோ சொல்ல ஒன்றுமே இல்லை. எவன் தாலியறுத்தாலும் அவன் தமிழனாயிருந்தா ஒரு திருப்தி அவ்வளவுதான்.
-பொன்னார்மேனியன்
தயிர்ச்சாதத்துள் ஒளி/ழியும் முழுப்பூசணிக்காய்
ramwatcher
http://www.tamilcanadian.com/pageview.php?ID=364&SID=59
Post a Comment