Tuesday, September 13, 2005

செய்தியின் பின்னணியில்

LTTE attack TV relay centre near Colombo

deepika.com, Tue Sep 13 08:37:45 EDT 2005
Suspected Tamil Tiger rebels lobbed grenades and fired at the office of a satellite TV relay centre, but no casualties were reported, Sri Lanka's Defence Ministry said on Tuesday.

The attack on the relay centre, run by an ethnic Tamil group that opposes the Tigers, took place on Monday night, ministry spokesman Brig. Daya Ratnayake said.

No one claimed responsibility. It was the latest in a series of violent attacks that have threatened a cease-fire that halted the two-decade civil war between the government and rebels.

Unidentified assailants hurled grenades at the same centre on June 2, damaging transmitting equipment and computers. The centre picks up satellite transmissions from Sun TV, based in neighbouring India.

====================
Suspected Tamil Tiger rebels lob grenades, shoot at TV relay center

Associated Press, Tue September 13, 2005 02:58 EDT .
Suspected Tamil Tiger rebels lobbed grenades and fired at the office of a satellite TV relay center, but no casualties were reported, Sri Lanka's Defense Ministry said Tuesday.

The attack on the relay center, run by an ethnic Tamil group that opposes the Tigers, took place Monday night, ministry spokesman Brig. Daya Ratnayake said. No one claimed responsibility.

It was the latest in a series of violent attacks that have threatened a cease-fire that halted the two-decade civil war between the government and rebels.

Unidentified assailants hurled grenades at the same center on June 2, damaging transmitting equipment and computers.

The center picks up satellite transmissions from Sun TV, based in neighboring India. The Tigers are banned in India, home to 56 million Tamils who have traditional and family ties with those in Sri Lanka.

The TV center is about 210 kilometers (130 miles) north of the capital, Colombo, in Vavuniya, a town that is under government control, but lies on the edge of Tiger-controlled territory.

---------------------

இரண்டாவதாகத் தரப்பட்டிருக்கும் Associated Press இன் செய்தியையே Deepika.Com எடுத்துத் தனக்கேற்றவாறு ஆக்கி வெளியிட்டிருக்கின்றாதாகத் தோன்றுகின்றதென்பதாக, இரண்டு செய்திகளையும் ஒத்துப்பார்க்கத் தோன்றுகின்றது.

இப்போது, இச்செய்திகளிலே சில பகுதிகளைக் கட்டுடைத்துப் பார்க்கலாம்.

1. வவுனியாக்கும் கொழும்புக்கும் உள்ள தூரம் குறித்துக் காண்க
Associated Press இன் செய்திப்படி, "The TV center is about 210 kilometers (130 miles) north of the capital, Colombo, in Vavuniya;" Deepika.com இன் "LTTE attack TV relay centre near Colombo" என்ற தலைப்பின் அபத்தமும் பொய்மையும் புலப்படும்.

2. The attack on the relay centre, run by an ethnic Tamil group that opposes the Tigers,
TamilNet செய்தியின்படி இது TELO இன் ஆதரவுடன் நடத்தப்படும் நிலையம். இலங்கையின் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களாக TNA கூட்டமைப்பில் TELO இன் சார்பிலே இருக்கின்றவர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம். இவர்கள் தமிழீழவிடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களென புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுள்ள ஊடகங்களே செய்தி வெளியிடுகின்றன. அப்படியானால், தமக்குத் தற்சமயம் ஆதரவான TELO இன் தொலைபரப்புநிலையத்தினைப் புலிகள் தாக்குவதற்கான தேவை எப்படியுருவானதென்பதாக இச்செய்தித்தாபனங்கள் செய்தியின் பின்னணியிலே விளக்கமாகச் சொல்வதில்லை.

3. The center picks up satellite transmissions from Sun TV, based in neighboring India. The Tigers are banned in India, home to 56 million Tamils who have traditional and family ties with those in Sri Lanka.
இந்த இரு அடுத்தடுத்திருக்கும் வசனங்களும் ஒரு கருத்தினை அவர்கள் அறியாமலே மறைமுகமாக வாசிக்கின்றவர்களிடையே ஏற்படுத்த உசாத்துணையாகும் தேவையோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. தம்மைத் தடைசெய்திருக்கும் இந்தியாவிலிருந்து வரும் சன் ரிவியின் நிகழ்ச்சிகளை மறுவொளிபரப்புச் செய்யும் மையத்தினை விடுதலைப்புலிகள் (எனச் சந்தேகிக்கப்படுகின்றவர்கள்) தாக்கியிருக்கின்றனர். ஆனால், ஜூன், 2 இலே இதேநிலையம் தாக்கப்பட்டபோதே, சென்னையிலிருக்கும் சன் ரிவி நிறுவத்தினரோ புலிகள் எதிர்ப்பு ஊடகமாக Asia Tribune இற்கு வவுனியாவிலிருக்கும் இத்தொலைக்காட்சி மறுவொளிபரப்புநிலையத்துக்கும் தமக்கும் எதுவிதமான தொடர்புமில்லை என்று கூறியிருக்கின்றனர். இந்த சன் ரிவி நிறுவனத்தின் மறுப்புக்குப் பிறகும் இம்முறை "..The center picks up satellite transmissions from Sun TV, based in neighboring India. The Tigers are banned in India,.." என்பதாக இவ்வூடகங்களினாலே செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.

4. Unidentified assailants hurled grenades at the same center on June 2, damaging transmitting equipment and computers.
2005 ஜூன், 2 இலே இதே ஒளிபரப்புநிலையம் தாக்கப்பட்டபோது வவுனியா நகர்காவற்றுறை இது விடுதலைப்புலிகளாலே மேற்கொள்ளப்பட்டதெனக் கூறினதாக Daily Mirror செய்தியினை மேற்கோள்காட்டி விடுதலைப்புலிகளுக்கு எதிர்நிலைப்பாடு கொண்ட அவுஸ்ரேலியாவின் spur வலைத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. இம்முறை அதே பொருட்பட தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளெனச் சந்தேகப்படுகின்றவர்கள் காரணமெனப் பாதுகாப்புப்படையதிகாரி பிரிகேடியர் தயா ரத்நாயகா சொல்லியிருக்கின்றார். இரண்டு சந்தர்ப்பங்களிலுமே தாக்கப்பட்ட நிறுவனத்துக்குரியவர்களின் வாக்குமூலங்கள் எங்குமே சொல்லப்படவில்லை. அவர்கள் இச்செய்தித்தாபனங்களினாலே செவ்வி காணப்படவுமில்லை. இந்நிலையிலே இச்செய்தியின் நம்பகத்தன்மை குறித்து எதுவுமே சொல்லப்படமுடியாது.

5. இச்செய்திகளின் பின்னணியாக எழும் சந்தேகம் பொதுவாகவே எல்லா இலங்கை குறித்த இந்திய செய்தித்தாபனங்கள், பல்தேசியசெய்தித்தாபனங்கள் தரும் செய்திகளின்போதும் கேட்பவர்களுக்கு எழ வேண்டிய தேவையுண்டு. இந்த பல்தேசியசெய்தித்தாபனங்களுக்கும் இந்தியசெய்தித்தாபனங்களுக்கும் இலங்கையின் செய்தியாளர்களாகச் செயற்படுகின்றவர்களின் பின்னணிகள் பொதுவாக செய்தித்தாபனங்களின் முகங்களின் பின்னாலே மறைந்து போகின்றன.

"இவர்கள் இலங்கையர்களா? இலங்கையர்களானால், எத்தேசிய இனத்தினையும் நலன்களையும் பிரதிபலிக்கின்றவர்கள்? இந்தியர்களா? இந்தியர்களானால், இவர்களின் பொதுவான நிலைப்பாடுகளும் கடந்த காலத்திலே செய்திகள் சாராது இவர்களின் இலங்கை அரசியல் குறித்த பார்வைகளும் கருத்துப்பத்திகளும் எப்படியாவிருந்தன? அல்லது, வேற்றுநாட்டவர்களானால், இவர்களின் பின்புலங்களும் நலன்களும் எவை?" இந்தக்கேள்விகளை செய்திகள் வாசிக்கின்றவர்கள் உணரமுயல்வதில்லை. அப்படியான பொழுதிலே, செய்திகள் வெறுமனே நிகழ்வுகளின் பதிவுகளாக மட்டுமே நம்பப்படும் பொய்நிலை உண்டு. எந்தச்செய்தியாளரும் ஒரு நிகழ்வினைக் கொடுக்கும்போது, தன் சொற்களினாலும் அவற்றின் சேர்க்கையிலான வசனங்களாலுமே கொடுக்கின்றார்; அவருடைய சொற்கட்டமைப்பு அவரது மொழித்திறனோடு மட்டுமல்லாது, அவரது நம்பிக்கையின் அடிப்படையினாலான சொற்றேர்வினாலும் கோர்ப்பினாலும் தீர்மானிக்கப்பட்டு வெளிவருகின்றது. அந்நிலையிலே, வாசகர்கள் ஓரளவுக்கேனும், செய்தியாளர்கள் குறித்த விழிப்புணர்வோடு அவர்களும் பங்குதாரர்களாகவிருக்கும் செய்திகளை வாசிக்கவேண்டிய அவசியமுண்டு. மேற்படி செய்திகளை/செய்தியினைத் தந்த அஸோஸியேட் பிரஸ் செய்தியாளர் யாரென்பது தெரியுமிடத்திலே, நாங்கள் இச்செய்திகளிலிருந்து உரித்தெடுத்துக் கொள்ள இன்னும் செய்தித்துணுக்குகளும் முடிவுகளுமுண்டு.

1 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

வாச்சரை மீறி களவெடுக்கிறது(செய்திவெளியிடுவது) லேசானா காரியமே