தயிர்ச்சாதத்துள் ஒளி/ழியும் முழுப்பூசணிக்காய்
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து தோக்கியோவினை மையமாகக்கொண்டியங்கும் இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பு நியூ யோர்க்கில் 19 செப்ரெம்பர் 2005 அன்று தெரிவித்திருக்கும் கருத்துகள் பற்றி இரண்டு செய்தி நிறுவனங்கள் தந்திருக்கும் செய்திகளை ஒத்துப் பார்ப்போம்.
முதலாவது பிரித்தானியாவின் புஷ் ஹவுஸில் அமைந்திருக்கும் பிபிஸி செய்திநிறுவனம் தந்திருக்கும் செய்தி
[BBC]
Donors warn over Sri Lanka poll
Tuesday, 20 September 2005, 07:05 GMT 08:05 UK
Foreign aid donors have urged all sides in Sri Lanka not to undermine the island's shaky peace process ahead of presidential elections in November.
இரண்டாவது இந்தியாவின் ரிப்ளிகேன் பதிப்பாளர்களின் த இந்து பத்திரிகை தந்திருக்கும் செய்தி
[The Hindu]
Wednesday, Sep 21, 2005
Show commitment to peace, LTTE told
V.S. Sambandan
COLOMBO: Sri Lanka's international donors on Monday said the three-year-old ceasefire agreement was facing its "most serious challenge" and wanted the Liberation Tigers of Tamil Eelam to "take immediate public steps to demonstrate their commitment to the peace process and their willingness to change."
பிபிஸியின் செய்திப்பதிவினையும் த இந்து இன் செய்தியாளர் தந்திருக்கும் செய்திப்பதிவினையும் ஒருங்கே வாசிப்பவருக்கு, பிபிஸி செய்தியின் நிதிவழங்குநாடுகளின் அமைப்பு தெரிவித்த பரந்துபட்ட கருத்துகளைத் தரும் நோக்கும் த இந்துவின் சம்பந்தன் தன் செய்தியிலே நிதிவழங்குநாடுகளின் அமைப்பு தெரிவித்த கருத்துகளிலே விடுதலைப்புலிகளைத் தொட்டுச் சொன்ன கருத்துகளை எடுத்துக்கொண்டு, அவற்றோடு தன் விழைவுவெறுப்பு சம்பந்தப்பட்ட அபிப்பிராயங்களை இணைத்து வாசிப்பவர்களுக்கு கருத்துமயக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கும் தெட்டத்தெளிவாக்க விளங்கும்.
மிக வெளிப்படையான சில உதாரணங்களை இங்கே தருகின்றோம்.
அ.
பிபிஸியின் செய்தியிலே கூறப்பட்டிருப்பது, "..The US, EU, Japan and Norway said the assassination of Foreign Minister Lakshman Kadirgamar had cast a shadow over peace moves with Tamil rebels....The statement called the 12 August assassination of Mr Kadirgarmar an "unconscionable act of terrorism", but stopped short of blaming the rebels directly, as the government has...The Tigers denied involvement in the killing... "
த இந்துவின் செய்தியிலே இதற்கு மாற்றாகக் கூறப்பட்டிருப்பது, "..The call came from the co-chairs of the Tokyo Donor Conference — the U.S., U.K., E.U., Japan and Norway — who met in New York to discuss the situation in the aftermath of the assassination of Lakshman Kadirgamar, by a suspected LTTE sniper..."
ஆ.
பிபிஸியின் செய்தியிலே கூறப்பட்டிருப்பது, "The donors said the only way to end Sri Lanka's ethnic conflict was a negotiated political settlement based on a federal state for Tamils."
த இந்துவின் செய்தியிலே இதற்கு மாற்றாகக் கூறப்பட்டிருப்பது, எதுவுமேயில்லை. ஒப்புக்கு வேண்டுமானால், பிபிஸி இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தை குறித்துச் சுட்டிக்காட்டியிருக்கும் டோக்கியோவின் நிதிவழங்கு அமைப்பின் மேற்கூறிய முக்கியமான கருத்துக்கு மாறாக, த இந்து பேச்சுவார்த்தை குறித்து முக்கியமாகச் சுட்டிக்காட்டுவது, "On the current standoff over talks to review the implementation of the agreement, the donors said they were "disappointed that the LTTE have not agreed to the proposed venue for talks," and urged "both parties to engage constructively" with Norwegian special envoy Trond Furuhovde..."
இ.
பிபிஸியின் செய்தியிலே கூறப்பட்டிருப்பது,"..The co-chairs look to all parties to refrain from violence and from statements and acts that could undermine progress toward the peaceful resolution of the conflict after the elections," they said, in a statement issued on Monday in New York..."
த இந்துவின் செய்தியிலே இதற்கு மாற்றாகக் கூறப்பட்டிருப்பது, "...Reiterating their "unequivocal condemnation" of the assassination, they said: "This unconscionable act of terrorism casts profound doubt on the commitment of those responsible to a peaceful and political resolution of the conflict." They said an "immediate end to political assassinations by the LTTE and an end to LTTE recruitment of child soldiers," were "two such steps.".."
இவ்வுதாரணங்கள் மிகத் தெளிவாக த இந்துவின் நோக்கினை வெளிப்படுத்துகின்றன. சொல்லப்போனால், ஓரளவுக்கு இந்தியாவின் பேரூடகங்கள் எல்லாமே இவ்வகையான காட்சியினைத்தான் தமது இந்திய வாசகர்களுக்குத் திட்டமிட்டுத் தரவிரும்புகின்றனவோ என்ற ஐயம் Press Trust of India இனை மேற்கோள் காட்டி, Deccan Herald வெளியிட்டிருக்கும் கீழ்க்காணும் செய்தியினையும் UNI இனை மேற்கோள் காட்டி NewKerala.com வெளியீட்டிருக்கும் செய்தியினையும் வாசிக்கும்போது, ஏற்படுகின்றது.
[Deccan Herald]
Wednesday, September 21, 2005
LTTE killings draw flak
Colombo, PTI:
Key donor nations on Tuesday warned that the Sri Lankan peace effort was facing its “most serious challenge.”
They also slammed the LTTE for carrying out political killings and asked all parties to exercise restraint during the presidential campaign.
[NewKerala.com]
Posted on 20 Sep 2005
Donor Co-Chairs urge LTTE to stop killings, recruiting children
UNI
Colombo: The Co-Chairs of the Sri Lanka's donor countries, which met in New York yesterday to discuss the deteriorating situation in Sri Lanka in the wake of the assassination of Foreign Minister Lakshman Kadirgamar, have urged the LTTE to put an immediate stop to political killings and recruitment of children to its ranks.
இது குறித்து இலங்கை அரசின் சமாதானத்துக்கான வலைத்தளத்திலே வந்த செய்தியினை, இந்திய ஊடகங்களின் செய்திகளோடு ஒத்து நோக்கினால், பெரும் வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்க அவதானிப்பாகும்.
[Peace In Sri Lanka]
19 September 2005
Statement of the Sri Lanka Co-Chairs
The Co-Chairs of the Tokyo Donor Conference in support of the peace process in Sri Lanka met in New York on 19 September to discuss the current situation in Sri Lanka, following the assassination of Sri Lankan Foreign Minister Kadirgamar.
The Co-Chairs reiterate their unequivocal condemnation of the assassination of the Foreign Minister. This unconscionable act of terrorism casts profound doubt on the commitment of those responsible to a peaceful and political resolution of the conflict.
The Co-Chairs call on the LTTE to take immediate public steps to demonstrate their commitment to the peace process and their willingness to change. An immediate end to political assassinations by the LTTE and an end to LTTE recruitment of child soldiers are two such steps.
இந்த அவதானிப்பு, இலங்கையரசின் கருத்துகளைத் தரும் விதமாக இந்திய ஊடகங்களிலே பெரும்பான்மை செயற்படுவது, ஊடகத்துறைக்கு அப்பாற்பட்ட / ஊடகதார்மீகத்தினை மீறிய அரசுகளுக்கிடையேயான உறவுகளைப் பேணும்விதத்திலே இந்த இந்திய ஊடகங்கள் பிரசாரகலங்களாகச் செயற்படுகின்றனவோ என்ற ஐயத்தினைக் கிளப்புகின்றது. இந்நிலை, செப்ரெம்பர் 11, 2001 இன் பின்னான உடனடியான காலப்பகுதியிலே நாட்டுப்பற்று என்பதை வெளிக்காட்டுவதாக எண்ணிக்கொண்டு பெரும்பாலான மையவோட்ட அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க அரசின் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துகளை அநேக சந்தர்ப்பங்களிலே இருட்டடிப்புச் செய்த நிலையினை ஒத்ததாகத் தோன்றுகின்றது. (சதாம் ஹுஸேனைச் செவ்வி கண்ட இடான் இராதரும் ஈராக்கிய செய்தித்தாபனத்திலே கருத்தினைத் தெரிவித்த என்பிசியின் செய்தியாளராகச் செயற்பட்ட பீற்றர் ஆர்னடும் வறுத்தெடுக்கப்பட்டதினை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமானது)
சமாதானத்துக்கான இணைப்பாகச் செயற்படும் நோர்வே அரசின் செய்தி தந்திருக்கும் தோக்கியோ நிதிவழங்குநர்களின் அறிக்கையின் சாரத்தினைக் காண:
[ReliefWeb]
Statement of the Sri Lanka Co-Chairs
19 Sep 2005
Source: Government of Norway
The Co-Chairs of the Tokyo Donor Conference in support of the peace process in Sri Lanka met in New York on 19 September to discuss the current situation in Sri Lanka, following the assassination of Sri Lankan Foreign Minister Kadirgamar.
The Co-Chairs reiterate their unequivocal condemnation of the assassination of the Foreign Minister. This unconscionable act of terrorism casts profound doubt on the commitment of those responsible to a peaceful and political resolution of the conflict.
இச்செய்தித்தாபனங்களின் இலங்கைப்பிரச்சனை குறித்த கருத்துவெளிப்பாடுகளைத் தொடர்ந்து நோக்குநர்களுக்கு இவ்வறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கும், "..The Co-Chairs deplore the activities of paramilitary groups, which fuel the cycle of violence and unrest. The Co-Chairs underscore the responsibility of the Sri Lankan government under the Ceasefire Agreement to disarm or relocate these groups from the north and east..." குறித்தோ "Cooperation between the Sri Lankan government, the LTTE and the Muslim community will be important for sustainable recovery in the north and east..." குறித்தோ மேற்படி செய்தித்தாபனங்களிலே ஒன்றேனுங்கூட, சிறுமூச்சுக்கூட விடாதது ஆச்சரியப்படுவதற்கான ஒரு விடயமில்லை என்று சொல்லலாம்.
21 comments:
70வதுகளில் 10 இந்திய பத்திரிக்கைளும் ஒரு செய்தி நிறுவனமும் கேஜிபியின் காசை வாங்கிக்கொண்டு செய்தி வெளியிட்டனவாம். இப்போது அப்படி ரா எதுவும் தருகிறதோ என்னவோ! ஆனால் இப்பொழுது ராம் வாச்சர் சுறுசுறுப்பாக இருப்பதற்கு மாலனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் உடுக்கை இழந்தவன் கைபோல இந்து ராமுக்காக வெளிப்படையாகவும், திசைகளின் வழியாகவும் போராடுகிறார்.
அவர் இருக்கட்டும். அவர் மார்க்ஸிஸ்ட் இல்லையே!
ராம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார், பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்றா இல்லை நெருப்புக்கோழி போலவா?
இது காரியக்கிறுக்குடா அப்படீங்கிறார் ஒருத்தர்.
நன்றி வாச்சர்!
-பொன்னார்மேனியன்
A fit case for complaining to Press Council of India. RamWatch should be in English also. And such instances of biased reporting should be continuosly documented and a report can be prepared by the end of year to expose the biases in Indian media particulraly Hindu.
இப்போது பலனிருக்கிறதோ இல்லையோ, இவை தொடர்ச்சியாகப் பதியப்பட வேண்டும்.
அதுவும் ஆங்கிலத்தில் தொகுக்கப்படுவது முக்கியம். பிறிதொரு நேரத்தில் பலருக்கு இச்சுட்டிகள் பயன்படும்.
வாழ்த்துக்கள் ராம்வோச்சர். தொடரட்டும் உங்கள் பணி.
All, Thanks for the comments. RAMWatcher appreciate them. Ravi Srinivas, Rosa Vasanth also pointed out the neccessity for blogging in english. The reason why RAMWatcher hasn't have an English blog is RAMwatcher's lack of command in English. However considering the urgency and neccessity, hereonwards, RAMWatcher will simultaneously blog in English.
RAMWatcher
நல்ல எடுத்துக்காட்டு.
நல்லதொரு ஒப்புநோக்கை செய்திருக்கின்றீர்கள். நிச்சயம் நிறைய நேரம் இதற்காய் எடுத்திருக்கும் என்பது புரிகின்றது. ரோசாவசந்த, இரவி கூறியதுபோலவே, ஆங்கிலத்திலும் ராம்வோட்சர் வரவேண்டும் என்பதே எனது விருப்பும்.
//ஆங்கிலத்திலும் ராம்வோட்சர் வரவேண்டும் என்பதே எனது விருப்பும்.//
எனதும்
-மதி
//The reason why RAMWatcher hasn't have an English blog is RAMwatcher's lack of command in English. //
RamWatch doesn't seem to realize the primary benefit of reading The Hindu--"to learn good English". :-)
Keep reading The Hindu and blog in English. You will achieve dual objectives--"know your English" and expose Ram & Co.
//RamWatch doesn't seem to realize the primary benefit of reading The Hindu--"to learn good English".//
:-)
Ponnaarmenian
நகைச்சுவைக்காக அல்ல மெய்யாகவே, நான்கூட சுந்தரமூர்த்தி சொல்லும் இரண்டு காரணங்களுக்காகத்தான் இந்து பத்திரிகையை வாசித்தேன். ஆனால், இந்துவின் ஆங்கிலம் இன்னும் அதே 'நல்ல ஒக்ஸ்போர்ட் ஆங்கிலமாக' இருக்கிறதா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை ;-) இல்லை இன்னும் ஆங்கிலேயரின் ஆங்கிலமே நாம் உபயோகிக்கிறோமென்று நிலைநாட்டத்தான், The Guardian கட்டுரைகளை அள்ளிப்போடுகின்றார்களென நினைக்கிறேன். ;-)
Why not add William Safire too? ;-) After all, he is like many in The Hindu, "A Good Liberal New York Times' Conservative columinist known for his English." ;-))
ராம்வோச்சர் ஆங்கிலத்திலும் எழுதவேண்டுமென நானும் கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் பணி சிறப்பானது.ஆங்கிலத்தில்
இட்டால்உங்கள் பணி இன்னும் பல இடங்களை
சென்றடையும் எனும் கருத்து நியாயமானதே.
தொடரட்டும் உங்கள் சேவை.
பத்ரி சமீபத்தில் இந்துவின் மோசமான ஆங்கிலத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதியதாக நினைவு. எனவே உங்கள் ஆங்கிலத்தின் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்!
இனி விடுதலைப்புலிகள் இந்தியாவில் பத்திரிக்கை நடத்தினால் தான் இனி செரிவரும்போல... சகல மாநில மொழியிலும் நடத்தினால் நலம், இல்லையேல் KGB செய்தது போல் தமிழீழ புலனாய்வு பிரிவும் செய்தால் மிக்க நலம்!
அநாநிமச் சகல மாநில மொழியிலும்??
சகல மாநிலங்களினதும் மொழிகளிலும் என்றோ அல்லது ஒவ்வொரு மாநில மொழியிலும் என்றோ சொல்ல வந்தீரோ?
"தேசிய நாளிதழ்"இல் ஈழத்தைப் பத்தி சேதி வந்தால், நான் இங்கேயும் வந்து ஏதாவது அதப்பத்தி சொல்லியிருக்கீங்களான்னு பாப்பேன். அப்படி வந்தது நல்லதாப் போச்சி. யார் என்ன சொன்னான்னு தெரிஞ்சிகிட்டேன்.
ஒரு அறிக்கையே அவரவருக்கு வசதியான மாதிரி வெட்டி சேதி போட்டிருக்கிறார்கள்.
இது எல்லா ஊடகங்களும் "புலி எப்ப புல்லை துன்னும்" என்று கண்ல விளக்கெண்ணை ஊத்திட்டு பார்த்துட்ருக்றதைத்தான் காமிக்கிது. "புலியும் புல்லைத் துன்னாமல்" இருந்தால் சரிதான்.
அனானி,
அந்த இன்னொரு அனானி "இந்தி"யதான் அப்டி சொல்றார்னு நெனைக்கிறேன்
பிபிஸி தமிழோசை
இலங்கை சுனாமி நிவாரண நடவடிக்கைகள் குறித்து கிளிண்டன் கவலை
இலங்கைக்கு கிளிண்டன் விஜயம் செய்தபோது இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சுனாமி அழிவை அடுத்து, அங்கு நிவாரண முயற்சிக்கு, உள்நாட்டு அரசியல் பிரிவினைகள் தடங்கலாக இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்புலி கிளர்ச்சியாளர்கள், முஸ்லீம் சமுதாயம் ஆகியோருடன் இந்த நிவாரண உதவியைப் பகிர்ந்து கொள்ள அரசு ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் உள்ள தாமதம் காரணமாக, நிவாரண உதவி தேவைப்படும் மக்களை உதவி எட்டவில்லை என்று, சுனாமி நிவாரணத்துக்கான ஐ.நா மன்ற தூதராக இருக்கும் கிளிண்டன் பிபிசி பேட்டியொன்றில் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை இடை நிறுத்தி இலங்கை உயர்நீதிமன்றம் ஜூலை மாதத்தில் பிறப்பித்த உத்தரவு கவலைக்குரிய ஒரு விஷயம் என்றும் அவர் கூறினார்.
http://www.eelampage.com/?cn=20317
http://www.tamilnation.org/saty/9211ram.htm
RamWatch In English
RAMWatcher
http://www.time.com/time/world/article/0,8599,1109554,00.html?promoid=rss_world
Post a Comment