Wednesday, October 19, 2005

ராம்வோச் - தமிழ்மணம் பின்னூட்டம் குறித்து..

தமிழ்மணம் நிர்வாகி காசி ஆறுமுகம் அவர்களின் தமிழ்மணம் திரட்டும் பட்டியலில் உள்ள/இல்லாத பதிவுகள் பதிவிலே டிசேபுரோ என்பவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

உங்களால என்ன புடுங்க முடியுமோ புடுங்குங்க. நாங்க யாரு? புலிங்க ஆதரவு, நக்ஸலைட்டு ஆதரவு, பாமக ஆதரவு, திராவிடர் கழக ஆதரவு அத்தனைக்கும் ஆதரவு தர்ர பதிவுங்க மட்டும் போட்டு மித்த திரட்டத்தேவையில்லாத எதிர்கருத்து உடைய பதிவெல்லாம் தூக்கிடுவோம். ஏன் ராம்வோச்சர் இங்கிலிபீஸ் பதிவுகூட இருக்கும். அப்பால ஜனாதிபதியையே கூப்பிட்டு எழுதவும் சொல்லுவோம். ஜெயலலிதாவால புடுங்கக்கூட முடியாது.

புதன், 19.10.05, 22:02:07


தமிழ்மணத்திலே ராம்வோச்சர் ஆங்கிலப்பதிவு ஏறி வந்ததற்கு காரணம் ராம்வோச்சராகிய எமது முகவரி மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட குளறுபடி என்பதால் தமிழ்மணத்திடம் மன்னிப்புக் கேட்கவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. தமிழிலே இருந்த ராம்வோச்சர் பதிவின் முகவரியினை பரந்த வாச்கர்வட்டத்தினை நோக்கிலே கொண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட ராம்வோச்சர் ஆங்கிலப்பதிவுக்கு (http://ramwatch.blogspot.com/) மாற்றிக்கொண்டு அதனைத் தமிழ்மணத்துக்கு அறிவிக்காமல், ராம்வோச்சர் தமிழுக்கு ஒரு புதிய முகவரியினை ஏற்படுத்திக்கொண்டு (http://ramwatchintamil.blogspot.com/) அதனை தமிழ்மணத்துக்கு அறிவித்ததாகும். அதனால், ராம்வோச்சர் ஆங்கிலப்பதிவாக தக்கித்திருக்கின்றது. ஆனால், ஆங்கிலத்திலே வந்த பதிவானபடியால் தமிழ்மணத்திலே முகப்பிலே தோன்றவில்லை. ராம்வோச்சர் ஆங்கிலப்பதிவு ஆக இதுவரை ஓர் உள்ளிடுகையை மட்டுமே கொண்டிருக்கின்றது. அது உள்ளிடப்பட்ட நாள் Friday, September 23, 2005. அன்றைய தினத்து தமிழ்மணப்பதிவுகளை நோக்குமிடத்து (http://www.thamizmanam.com/tamilblogs/archive.php?date=20050923) ராம்வோச்சர் ஆங்கிலப்பதிவு தேரப்பட்டுத் தோன்றியிருக்கவில்லை. ஆங்கிலப்பதிவாதலினால் எத்தனை பதிவுகளிட்டாலுங்கூட தோன்றியிருக்க வாய்ப்புமில்லை.

எம் தவற்றினை தமிழ்மணம் சுமக்கவேண்டி ஏற்பட்ட அவநிலைக்காக, இப்பின்னூட்டம் மூலம் தமிழ்மணம் நிர்வாகிகளிடம் இந்தக்குளறுபடிக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். கூடவே, ராம்வோச்சர் ஆங்கிலப்பதிவின் இணைப்பினை நீக்கிவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

ஆயினும் டிசேபுரோ என்று மேலே பின்னூட்டம் இட்ட அன்பர் கடந்த இருநாட்களாக தமிழ்மணத்திலே ஏற்பட்ட மாற்றத்தினை எவ்வாறு கருதிக் கொண்டு சிலர் செயற்படுகின்றார்களென்பதை மிகவும் தெட்டத்தெளிவாக உணர்த்தியிருக்கின்றார். இவரும் இவரைப் போன்றவர்களினதும் தனிமனிதசுதந்திரக்கூச்சல்களைத் தீர்மானிப்பவையென இவரின் பின்னூட்டத்திலிருந்து நாம் உய்த்தறிந்துகொள்வது, "புலிங்க ஆதரவு, நக்ஸலைட்டு ஆதரவு, பாமக ஆதரவு, திராவிடர் கழக ஆதரவு அத்தனைக்கும் ஆதரவு தர்ர பதிவுங்க மட்டும் போட்டு மித்த திரட்டத்தேவையில்லாத எதிர்கருத்து உடைய பதிவெல்லாம் தூக்கிடுவோம்."

தமிழ்மணத்தின் நிறுவனரின் தனிப்பட்ட நிர்வாக+நெறிக்கோவையின் விளைவான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் இலக்குகளையும் (அவற்றிலே சிலவற்றுடன் ராம்வோச்சர் மிகவும் முரண்பாடு கொண்டிருந்தபோதுங்கூட) ஒரு குறித்த சாராரை நோக்கி இலக்கு வைக்கப்பட்டதாக திசைதிருப்பி "புலிங்க ஆதரவு, நக்ஸலைட்டு ஆதரவு, பாமக ஆதரவு, திராவிடர் கழக ஆதரவு அத்தனைக்கும் எதிர்ப்பான பதிவாளர்களை"த் திரட்டும் நோக்குடன் பின்னூட்டங்களையும் பேச்சுச்சுதந்திரத்தின் பேரிலே கூச்சலையும் இடும் டிசேபுரோ போன்றவர்களின் கருத்துக்களை கொஞ்சம் நிதானத்துடன் நாம் வாசிக்கவேண்டும். சற்று நேரம் செலவு செய்து தமிழ்மணத்திலே துழாவினால், இதுவரை பாமகவுக்கும் அக்கட்சி சார்ந்தவர்களுக்கும் எதிராக எத்தனை பதிவுகள் தொடர்ந்து வெளியாகின என்பதை நாம் கண்டு கொள்ளலாம். இப்பதிவுகள் தமிழ்மணத்திலேயிருந்து நீக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதற்குமுன்கூட தமிழ்மணத்திலே தமிழ்மணமுதன்மைநிர்வாகியின் தனிப்பட்ட கருத்து காரணமாகச் சேர்க்கப்படாதிருந்த பதிவுகள் குறித்து டிசேபுரோ போன்றவர்கள் அந்நேரத்திலே எதுவிதமான எதிர்ப்புக்கருத்துகளும் தெரிவிக்கவில்லை. உ+ம்: தமிழ்மணம் மன்றத்துப்பகுதியிலே தேடும்போது அகப்பட்ட கீழ்க்கண்ட குறிப்பு:

காசி
Joined: 31 Dec 2004
Posts: 115
Location: கோவை
Posted: Sat Oct 08, 2005 8:51 pm Post subject:

--------------------------------------------------------------------------------

சிவா, உங்கள் புதிய படைப்பு தமிழில் இல்லை.
கஜினிகாம்கி, உங்கள் வலைப்பதிவால் தமிழ் வலைப்பதிவு வாசகருக்கு எந்தப் பயனும் இல்லை என்பது நிர்வாகியின் கருத்து எனவே சேர்க்கப்படாது. பாரதி, நீங்கள் மூன்று படைப்புகள் எழுதியபின்னரே தமிழ்மணம் பட்டியலில் சேர்க்கைக்கு அளிக்கவேண்டும்.
_________________
அன்புடன்,
-காசி


இன்னும் கடைசியாக நிகழ்ந்த தமிழ்மணத்தின் நிர்வாக மாற்றத்தின் பின்னாக பச்சைவிளக்கு அணைக்கப்பட்ட / விலக்கப்பட்ட பதிவுகளை நோக்குமிடத்து அவற்றிலே ஓரிரண்டினைத் தவிர்த்து ஏனையவை டிசேபுரோ விலக்கப்பட்ட கனிகளின் பொதுச்சாரமாகக் கூறும் "புலிங்க ஆதரவு, நக்ஸலைட்டு ஆதரவு, பாமக ஆதரவு, திராவிடர் கழக ஆதரவு அத்தனைக்கும் எதிர்ப்பான பதிவுகள்" ஆகத் தென்படவில்லை. அல்லது, விலக்கப்பட்டனவாகச் சொல்லப்பட்டு மிகவும் தெளிவாக தமிழ்மணத்திலே பெயர்குறிப்பிடப்பட்டுப் பேசப்படும் குசும்பன் என்பவரின் பதிவும் ஓரளவுக்கு என்னமோ போங்க என்பவரின் பதிவும் டிசேபுரோ குறிப்பிடும் "புலிங்க ஆதரவு, நக்ஸலைட்டு ஆதரவு, பாமக ஆதரவு, திராவிடர் கழக ஆதரவு அத்தனைக்கும் எதிர்ப்பாக" இயங்குதலையே தம் நோக்குகளாகக் கொண்ட பதிவுகளாக இருக்கக்கூடுமோ புரியவில்லை. டிசேபுரோதான் தெளிவுபடுத்தவேண்டும்.


தேர்ந்தெடுத்த குழுமத்தினரின் பேச்சுச்சுதந்திரம் (புலிங்க ஆதரவு, நக்ஸலைட்டு ஆதரவு, பாமக ஆதரவு, திராவிடர் கழக ஆதரவு அத்தனைக்கும் எதிர்ப்பான பதிவுகளை) வேண்டிநிற்கும் டிசேபுரோ போன்றவர்கள் கலங்கிய குட்டையிலே மீன் பிடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதை ராம்வோச்சர் அறிவோம். இவர்களைப் போன்றவர்கள் இப்படியான செயற்பாடுகளிலே ஈடுபடுவதும் இதுவல்ல முதற்றடவை என்பதையும் மீதித் தமிழ்ப்பதிவாளர்கள் போல நாமும் அறிவோம்.

தொடர்ச்சியாக மாற்றுக்கருத்துகளுக்கும் பேச்சுச்சுதந்திரத்துக்கும் எமது அரசியல்சார் நிலைப்பாடுகளுக்கும் விழுமியங்களுக்கும் அப்பாலும் குரல் கொடுத்தே வருகிறோம்; வருவோம். அந்த வகையிலே தமிழ்மணத்தின் இணைப்பிலிருந்து எந்தப்பதிவும் - அதன் அரசியல், சமூகப்பார்வை எவையாக இருப்பினுங்கூட- அதன் உள்ளடக்கம், சொல்நளினம் காரணங்களாக விலக்கப்படக்கூடாதென்பதே எமது அவாவும் தமிழ்மணத்துக்கான வேண்டுகோளுமாகும். அதேகோட்டுச்சிந்தனையிலே மிகவும் குறுகிய நோக்குடன் "புலிங்க ஆதரவு, நக்ஸலைட்டு ஆதரவு, பாமக ஆதரவு, திராவிடர் கழக ஆதரவு அத்தனைக்கும் எதிர்ப்பாக இயங்கும் பதிவுகளை" மட்டும் விலக்கியதாக உண்மைக்கு மாறான கருத்தினையும் ஒடுங்கிய சிந்தைப்போக்கினையும் வெளிக்காட்டும் டிசேபுரோவினையும் அவரினை ஒத்த கருத்துகளை வெளியிடக்கூடியவர்களையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்; ராம்வோச்சர் வாசகர்களையும் அவர்களின் வாசிப்பினூடாக டிசேபுரோ போன்றவர்களினை உணர்ந்துகொள்ள வேண்டிநிற்கிறோம். நன்றி.

3 comments:

Anonymous said...

Thangalathu Nilaip padu Vilakkamum Niyayame!

Anonymous said...

ராம நீங்க வாட்ச் பண்ணீக்கிட்டுருந்த சமயத்தில உங்களேயே Ip address வோட யாரோ கண்காணிச்சிக்கிட்டு இருக்காங்களே. பார்த்தீங்களா ப்ரோ ?

ஈழநாதன்(Eelanathan) said...

வலைப்பதிவின் உரிமையாளர் அல்லாத பார்வையாளர் ஒருவர் இன்னொருவரின் பின்னூட்டத்தை வைத்து அவரது இணைய முகவரியைக் கண்டுபிடிக்க முடியுமா கண்டுபிடித்தேன் என்று சிவகுமார் சொல்வதால் கேட்கிறேன் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்