Thursday, October 20, 2005

யாரோ அவரே

ஒரு சகோதரர் ராம்வோச்சரும் promise-this-is-not-a-spam உம் ஒருவரே என்பதை இணையமுகவரியை வைத்துக்கொண்டு காசியின் பதிவிலிருந்து கண்டுபிடித்திருக்கின்றார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதை ஏற்றுக்கொள்கின்ற பக்குவமுள்ளதால் அவரைப் பாராட்டிக்கொண்டு விடயத்துக்கு வருவோம். அதுபோலவே promise-this-is-not-a-spam என்ற 'அநாமதேய'த்தினையே அநாமதேயத்துக்கு அநாமதேயமாகப் பொருத்திக்கொண்டு காசியின் அதேபதிவிலே எழுதிய இரண்டாவது promise-this-is-not-a-spam இனையும் தனது பெயரிலியே அநாமதேயமாக எழுதியவர்களையும் கண்டு சொல்லியிருந்தால், இன்னும் வெகுவாகப் பாராட்டியிருப்போம். எமது பாராட்டுகளுக்காக அலைகின்றவர் அவரில்லையென்றபோதுங்கூட, அந்த அநாமதேயங்கள் இணைந்திருந்த முகவரிகளையும் சொல்லப்படாதது குறித்து நாம் அதிலேதும் சூதுள்ளதோவெனச் சந்தேகம் கொள்ளவில்லை; வருந்த மட்டுமே செய்கின்றோம். அடுத்தவரான காசியின் பதிவிலே தோன்றிய promise-this-is-not-a-spam இனைக் கண்டுபிடிக்கக்கூடியவர் அவரது பதிவிலே அடிக்கடி தோன்றும் சூச்சூ என்பவரும் ஸ்ரீகாந்த் மீனாட்சியின் கிருஷ்ணன் - கத்ரினா - காலச்சுவடு பதிவிலே தோன்றிய அநாமதேயங்களும் பயன்படுத்திய இணைய முகவரிகளையும் கண்டு எங்கள் எல்லோருக்குமாகச் சொன்னால், எங்களுக்கும் கசக்கவா போகிறது? குறைந்தபட்சம், ராம்வோச்சரோ அல்லது வேறு யாராவது ப்ரோவோதான் ஸ்ரீகாந்த் மீனாட்சியின் பதிவிலே எழுதியிருக்கிறாரோ என்று சந்தேகம் கொண்ட ராம்வோச்சரின் ஓரிரு நண்பர்களுக்கேனும் ராம்வோச்சர் தாம் களங்கமற்றவரென்று நிரூபிக்க உதவலாம். ஆனால், ராம்வோச்சர் களங்கமற்றவரென்பதினை நிரூபிக்கின்றதிலே அவருக்கு ஆர்வமிருப்பதாகத் தெரியவில்லை என்பதாகவே அவரின் "சில ப்ரோக்கள் ஐ.பி. அட்ரஸ் எடுத்துப் போடுகிறேன் என்று தப்பும் தவறுமாக எடுத்துப் போடுகிறார்கள். அந்தப் ப்ரோக்களின் ஐ.பி.ஐயே சரியாக எடுத்துப் போட்ட மட்டில் எனக்கு சந்தோஷமே. நியாயவான், யோக்கியன், எதுவென்றாலும் தைரியமாகப் பேசுபவர் என்று சொல்லிக் கொள்கிறவர்களின் லட்சணம் எல்லாம் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி" இலிருந்து நாம் கண்டுகொள்கிறோம். இதிலே பீரோக்கள் ஏன் வந்தனவென்று வாசிக்கின்றவர்கள் எண்ணினால், பீரோக்களினதும் எதிர்-பீரோக்களினதும் நேரக்கதவுகளையும் காலக்கபாடங்களையும் திறந்துகொண்டே போய்ப்பாருங்கள். புரிந்தால், எமக்கும் சொல்லுங்கள். சகோக்களிலே ஒருவர் மாஸாசூசெட்சுக்கு மசக்கை எடுத்துத் தப்பும் தவறுமாக ஐபி கண்டுபிடிப்பதினை ஒத்ததுபோல, இந்த சகோவும் "சில ப்ரோக்கள் ஐ.பி. அட்ரஸ் எடுத்துப் போடுகிறேன் என்று தப்பும் தவறுமாக எடுத்துப் போடுகிறார்கள்."

இப்போது, கவலைப்படவேண்டாமென்று சகோ சொல்லியிருப்பதால், நாம் நிம்மதியான பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றோம். இல்லாவிட்டால்.... ஐயகோ! எமது நிலை என்ன! இதுவரை முன்னைப்போலவோ குசும்பரைப்போலவோ ஒரு வாரம் பதினான்கு மணிநேர அவகாச அந்தரிப்புகள் தரவில்லையென்பதையிட்டு நிம்மதியான பெருமூச்சு இன்னும் வெகுநிம்மதியாகப் போகின்றது. இல்லையென்றால், நினைக்கும்போதே நெஞ்சு பதறுகின்றது. ஆளுக்காள் முகவரி நோண்டும் நேரத்திலே அடுத்தவர் பதிவிலே எழுதுகின்ற ஒருவர் தன் முகவரி முழுக்க மறைத்துக்கொள்ளுமென்று எண்ணிக்கொண்டெழுதுவது மடமை. குறைந்த பட்சம் ராம்வோச்சருக்கு அப்படியாக ஆளைக் கண்டுபிடிக்கும் திறமையிருக்கின்றதோ இல்லையோ முகவரிகளையும் முகமூடிகளையும் கண்டுகொள்கிற திறமைசாலியான சகோக்கள் இருக்கின்றார்களென்பதிலே நம்பிக்கையுண்டு.

சட்ட ரீதியாகவோ சட்டைரீதியாகவோ எவர் நடவடிக்கை எடுப்பது குறித்தேதும் வருத்தமில்லை. அவரது பதிவிலே வரும் பின்னூட்டங்கள் குறித்து சட்டம் நுழையும்வரை தான் என்ன செய்யவேண்டுமென்று நினைப்பது காசியின் உரிமையென்றானபோதுங்கூட, தார்மீக நிலைப்பாட்டிலே காசி தனது "ஒரு அறிவிப்பு:" பதிவிலே பின்னூட்டமிட்ட அனைவரது பின்னூட்டங்களையும் வைத்திருப்பாரென்பதிலே நம்பிக்கை வைத்திருக்கின்றேன். இணையும்முகவரிகளைக்கூட வைத்திருக்கலாம். அவ்வாறான சட்ட ரீதியான நடவடிக்கைகள் வரும்போது, அவர் அவற்றினை சமர்ப்பிக்கவேண்டப்படின் எல்லா பின்னூட்ட இணையமுகவரிகளையும் அவர் தரலாம். கூடவே, சகோவின் இறுதிவேண்டுகோளை இன்னும் உறுதிப்படுத்தி "இன்னொரு வழி, பதிவிட்டவர்களின் ஐ.பி.களிலே ஒன்றாகவிருக்கும் ஐபிக்கள் எல்லாம் பற்றி காசி சொல்வது. அவரும் சொல்லலாம்." என்று வேண்டுகோளினை நாமும் விடுக்கின்றோம்.

இனி promise-this-is-not-a-spam இனையும் ராம்வோச்சரினையும் ஒன்றாகச் சேர்த்து இழுத்திருப்பதால், promise-this-is-not-a-spam இன் கருத்துகள் குறித்து ராம்வோச்சரின் கருத்துகளை விரித்து விளக்கிச் சொல்லாமல் விட்டால் எமது சகோ தப்பிக்கும்முயற்சி என்று வியாக்கியானம் செய்துவிடுவாரென்று முன்னைய அனுபவங்கள் அழுத்திச்சொல்வதால், ராம்வோச்சரின் promise-this-is-not-a-spam கருத்தினைக் குறித்த விளக்கங்களினையும் சொல்லிவிடுவது நல்லது. அதற்காக, போலி promise-this-is-not-a-spam, போலி சிவகுமார் இன் கருத்துகளையெல்லாம் விளக்கும் நிர்பந்தங்களினை ஏற்படுத்தும் விதமாக இடைச்செருகல்கள் தனது அடுத்தபதிவிலே "அவன்தாண்டா இவன்; இவள்தாண்டா அவல்" என்றெல்லாம் சகோ கருத்தினைப் பிசைந்து தேவபிரசங்கம் செய்யமாட்டாரென்று நம்புகின்றோம்.

promise-this-is-not-a-spam இன் கருத்துக்கும் ராம்வோச்சரின் கருத்துக்கும் கொள்கையளவிலே முற்றிலும் உடன்பாடே. டிசேபுரோ என்பவரின் குற்றச்சாட்டுகளுக்கெதிராக ராம்வோச்சரின் முன்னைய பதிவிலே சுட்டியிருப்பதுபோல, காசி நீக்கம் செய்த பதிவுகள் குறித்த விவாதம் இத்துணை பெரிதுபடுத்தப்படுவது குசும்பன் என்பவரின் பதிவு விலக்கப்பட்டதன் பின்னாலேயே. இதற்கு முன்னே தமிழ்மணத்திலே விலக்கப்பட்ட / சேர்க்க மறுக்கப்பட்ட பதிவுகள் குறித்து எதுவிதமான எதிர்ப்பும் எழுப்பப்படவில்லை. ஆனால், promise-this-is-not-a-spam இனைப் போலல்லாது, ராம்வோச்சருக்கு குசும்பரின் பதிவு நீக்கத்துக்கு சந்திரமதியினைப் பகிடி பண்ணியதற்கும் அப்பால் இன்னொரு காரணமுமுண்டு என குசும்பரின் பதிவு நீக்கப்பட்டதற்காகக் குரலெழுப்புகின்றவர்கள் நினைப்பதாகத் தோன்றுகின்றது. இந்திய ஜனாதிபதி திரு. அப்துல் கலாமுக்கு காசி எழுதிய அஞ்சலினைக் கிண்டல் செய்து குசும்பன் பதிவிட்டதுதான் முதன்மைக்காரணமென்று குசும்பரின் பதிவு நீக்கப்பட்டதினைச் சுட்டி எதிர்க்குரலெழுப்புகின்றவர்களின் வாதமென்கிறோம். ஆனால், குசும்பரின் பதிவுகளையும் அவரின் பதிவுகளிலே பின்னூட்டமிடுகின்ற சிலரின் அதே "பாணியிலே"யான சட்டரீதியிலே அவதூற்றுக்குற்றச்சாட்டினையும் ஆளுமைச்சேதாரத்தினையும் திரிபினையும் ஆன்றோர்கள், "தந்தை பெயரறியாத தனயர்கள்தான் இப்படி அடுத்தவரைப் பற்றி மோசமாக எழுத மட்டுமே அவதாரம் எடுப்பவர்கள் அல்லது ஆண்மையின் எந்த வீரியமும் இல்லாதவர்கள்" என்று வகைப்படுத்திச் சுட்டும்வகையிலே தொடர்பதிவுகளையும் பார்த்தால், அவற்றின் இலக்குகள் டிசேபுரோ அவர்கள் தமிழ்மணத்தினாலே விலக்கப்பட்டதாகச் சுட்டிச்சொன்ன பதிவுகளின் வகைவரையறுப்புக்கான தொடர் ஞாபகத்துக்கு வருவதினைத் தவிர்க்கமுடியவில்லை.

அப்படியாக எண்ணிக்கொண்டு promise-this-is-not-a-spam சந்திரமதியினை இலக்குவைத்து "மென்மையான நகைச்சுவை இழையோட" குசும்பரின் பதிவு வந்ததின் பின்னால், நீக்கப்பட்டதாக ஒரு சகோ எண்ணிக்கொண்டு நீதி கேட்டு வந்திருப்பதை நினைவிலே கொண்டிருக்கலாம். இணையத்திலே தமிழ்மணம் வருவதற்கு முன்னாலேமட்டுமல்ல, தமிழ்ப்பதிவுகளும் யாஹூ குழுமங்களும் வரமுன்னாலும் ராம்வோச்சர் இருந்தாரென்பதை இங்கே நினைவு படுத்திக்கொண்டு தமது ஊகத்தினைச் சொல்கின்றாரென்பதை நினைவிலே கொள்ளுங்கள். மரத்தடியிலேயும் ராயர்காபிகிளப்பிலும் ஒரு சகோ இணையமுன்னாலேயே ராம்வோச்சர் இருந்திருக்கின்றார்; திண்ணை தளம் தொடங்கி அடுத்தடுத்த வாரங்களிலேயே அங்கே படைப்பும் அனுப்பியிருக்கின்றாரென்பதையும் சுட்டிக்காட்டிவிடுவோம். (தற்போதைய திண்ணையிலே அதைத் தேடாது, திண்ணை தொடங்கிய மிகத் தொடக்க காலத்திலே இருந்ததற்கும் இப்போதுள்ளதற்குமிடையே ஏதேனும் படைப்புகள் தள இடம் மாற்றம் குறித்து விட்டுவிடப்பட்டதா என ஒரு சகோ தன் தற்போதைய நண்பர்களிடம் கேட்டறிந்து கொள்ளலாம்) இவற்றினைச் சொல்வது, ராம்வோச்சரின் வளர்ச்சியினைச் சொல்லி இப்படியான ஆதி நாமே உம்மோடு பேசுகின்றோமே என்பதற்காகவல்ல. ராம்வோச்சரிலும்விட ஆதியான ஆட்கள் குறைந்தது நான்கு பேராவது அவ்வப்போது தமிழ்ப்பதிவுகளிலே பதிந்துகொண்டிருக்கின்றார்களென்பதாலே அப்படியான கொம்புகளைச் சுமக்கவிரும்பவில்லை. ஆனால், இத்தனை வலைவரலாற்று முன்னோட்டமும் எதற்கென்றால், ராயர் க்ளப்-மரத்தடி- ஹரி கிருஷ்ணன் - முருகன் - மாலன் - சிறுகதைப்போட்டி இப்படியான பல சம்பவங்களை ராம்வோச்சர் சம்பந்தப்படாது ஒதுங்கி நின்றேனும் கண்டிருக்கின்றார் என்பதையும் இன்னமும் ராயர் காபி கிளப்பிலும் மரத்தடியிலும் (ஆதிமரத்தடியிலும் அதன் பின்னால் இன்னொரு யாஹு! குழுமம் இடம் கருதி தற்போதைய மரத்தடியாக மாற்றபட்டதையும் அறிந்துகொண்டும்) துருவக்கரடியாக கொடுத்த வாக்குக்காக எதையும் பேசுவதில்லையென்றபோதுங்கூட எங்கோ இருக்கின்றார் என்பதையும் ஒரு சகோ கண்டு கொள்ளவுமே. (மரத்தடியிலே பழைய பெயர்களை விலத்த ஒரு சகோவின் கருத்துச்சுதந்திர நேர்மையான மனம் இடம் கொடாதென்பதை நாமறிவோம்). இதற்காகத்தான் "அதற்காக, போலி promise-this-is-not-a-spam, போலி சிவகுமார் இன் கருத்துகளையெல்லாம் விளக்கும் நிர்பந்தங்களினை ஏற்படுத்தும் விதமாக இடைச்செருகல்கள் தனது அடுத்தபதிவிலே "அவன்தாண்டா இவன்; இவள்தாண்டா அவல்" என்றெல்லாம் சகோ கருத்தினைப் பிசைந்து தேவபிரசங்கம் செய்யமாட்டாரென்று நம்புகின்றோம்." என்ற மறுப்புக்கூற்றினைத் தரவேண்டியதாகவிருக்கின்றது.

மரத்தடியின் சிறுகதைப்போட்டிகள், கவிதைப்போட்டிகள் தொடர்பாக ஒரு சகோ பற்றி இந்தியாவிலிருந்து நண்பர்கள் நமக்கு விசனத்துடனும் பெரு ஆத்திர வசனத்துடனும் எழுதியிருந்தார்கள். அவர்கள் எழுதியதன் காரணம், நான் ஒரு சகோவுக்கு ஆதரவாகவும் சந்திரமதிக்கு ஆதரவாகவும் பேசுவதாக எண்ணிக்கொண்டதாலாகும். பின்னால், ஒரு சகோ ராம்வோச் பதிவினைத் தனிப்பதிவாக்க வேண்டிய முனைப்பினை ஓரளவுக்கு தனது பின்னூட்டங்களினாலே ராம்வோச்சரின் முன்னைய பதிவொன்றிலே தூண்டியபோது, அதே இந்திய நண்பர்களிலே ஒருவர், "பார்த்தாயா பதூதா? அன்றே சொன்னேனே?" என்று விளித்து எழுதியிருந்தார். இதன் பின்னால், மரத்தடியிலிருந்து சந்திரமதி விலகிக்கொள்கிறார். ஏன் எதற்கு என்று ராம்வோச்சருக்கு சத்தியமாகத் தெரியாது. ஆனால், எவர் எங்கே எந்தப்பக்கம் பிரிந்தார் என்பது எனி இந்தியன் காம் இன் பின்னான சந்திரமதியின் பதிவின் பின்னூட்டங்களிலிருந்து தெரியவருகின்றது.

ராம்வோச்சர் ஒருவர் மட்டுமே இத்தனை கூத்துகளையும் பார்த்துக்கொண்டிருக்கவில்லையென்பதையும் வாசகர்கள் இதுவரை வார்த்தை முட்டாமல் வந்திருந்தால் புரிந்துகொண்டிருக்கலாம். இப்போது பார்ப்போம். இத்தகைய நாடகங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்து குசும்பனின் பதிவு நீக்கம் வரை வந்த எவருக்குமே (ராம்வோச்சர் உட்பட) காசியின் ஜனாதிபதிக்கான அஞ்சலுக்கான கிண்டலின்பின்னும் நீக்கப்படாத குசும்பனின் பதிவு, சந்திரமதியின் மீதான கிண்டலின்பின்னால் நீக்கப்பட்டவுடன் முன்னெந்தப்பதிவுமே சேர்க்க மறுக்கப்பட்டபோதுங்கூட குரலெழுப்பாத ஒரு சகோ வந்து குரலெழுப்பினால் மிகவும் இலகுவாக ஊகிக்கக்கூடியது மரத் தடியின் விளைவான விழுதுகளின் விளையாட்டே. அந்த வகையிலே அந்நிலையிலே மெய்யான promise-this-is-not-a-spam தெரிவித்திருக்கும் கருத்தினையே ராம்வோச்சரும் வார்த்தை பிசகாமல் பிறழாமல் சொல்லியிருக்கமுடியும்.

ஒரு சகோவின் பதிவுகளினையும் பின்னூட்டங்களையும் ராம்வோச்சர் வாசிப்பதுபோல பலரும் வாசித்திருக்கலாம். அவற்றிலே பின்னூட்டங்களிலே அநாகரீகமாகவோ நாகரீகமாகவோ எவர் ஒரு சகோவின் கருத்துகளை மறுத்தெழுதினால், அதன் பின்னால், ஒரு சகோவின் "தேவனின் பெயரால் உன்னை மன்னித்துவிடுகிறேன்" என்ற தேவபிரசங்கமும் அதைத் தொடர்ந்து ஓர் அநாமதேயத்தின் அநாகரீகமான சொற்பதங்களுடனுமான பதிவொன்றும் வருவதுண்டு. இதுபோலவே, மெய்யான promise-this-is-not-a-spam இன் உள்ளிடுகையின் பின்னால், பொய்யான promise-this-is-not-a-spam இன் பதிவினையும் யாராவது இட்டு மெய்யான promise-this-is-not-a-spam இன் பெயருக்கேற்ற நோக்கினைக் கெடுக்க முயற்சித்திருக்கலாமென்று சொல்லவந்திருக்கலாம். மெய்யான(?) promise-this-is-not-a-spam தன்னுடைய முகவரியினை மறைக்கப் பெரிய கண்ணைப்பொத்தி விளையாட்டு விளையாடியது கூடத் தெரியவில்லை ("At least Kasi knows who is who, and who is NOT who. That's enough for me at this moment.") அதனால், இந்த அடிப்படையிலே, பொய்யான promise-this-is-not-a-spam இன் பின்னூட்டங்களின் இணைமுகவரிகளினையும் ஒரு சகோவின் பெயரிலேயே இடப்பட்ட பின்னூட்டங்களின் இணைமுகவரிகளினையுங்கூட ஒரு சகோவோ அல்லது மசக்கையில்லாமல் துல்லியமாக முகவரியறியக்கூடிய வேறெந்த வல்ல சகோவோ எடுத்து ராம்வோச்சரையும் promise-this-is-not-a-spam இனையும் சம்பந்தப்படுத்தித் தந்த விபரம்போல எமக்குத் தந்தால், இந்த விளையாட்டுகள் குறித்து இன்னும் பெரும் அதிசயக்கண்டுபிடிப்புகளும் பாராட்டுகளும் விளையாட்டுச்சூட்சுமங்களும் நியதிகளும் எமக்குத் தெரியவரலாம்.

அதுவரை இணையச்சட்டத்தினையும் கட்டம் போட்ட சட்டையையும் காசியின் பதிவின் பெயரால் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

promise-this-is-not-a-spam இற்காகப் பேசும் தேவை இப்பதிவிலோ வேறெந்த பதிவிலோ ராம்வோச்சருக்கில்லையென்றபோதுங்கூட, விரித்துச் சொல்லாதுவிட்டால், அடுத்தது எந்தப்பதிவிலே எவர் தனக்கெதிராகப் பதிவிட்டாலுங்கூட, ஒரு சகோ அது ராம்வோச்சர் என்றபடியே வருவதும் அதற்கு ராம்வோச்சர் தன் (பதிவின்) முதன்மை நோக்கினை இங்கே விட்டுவிட்டுப் பதில் கொடுத்துக்கொண்டு கிளித்தட்டு ஆடுவதுமே விளைவாகிவிடுமென்பதாலே இந்தப்பதிவு. இதற்கு எதிர்வினையோ பிறவினையோ ஆற்ற நோக்கில்லை.



பின்குறிப்புகள்:

1. ராம்வோச்சரின் முன்னைய பதிவிலே இது குறித்து நாமிட்ட பின்னூட்டங்கள் அந்தப்பதிவின் நோக்கினைத் திசைதிருப்பாதிருக்கும்படியாக - இச்சம்பவங்கள் குறித்து இந்தப்பதிவு வந்திருக்கின்ற காரணத்தினால் - நீக்கப்பட்டிருக்கின்றது.

2. இந்தப்பதிவும் கடந்த பதிவும் ஓரிரு வாரங்களின் பின்னர் ராம்வோச்சரின் முதன்மைநோக்குக்கு சம்பந்தப்பட்டவையல்ல என்றவளவிலே நீக்கப்படும். அதனால், விரும்பியவர்கள் இப்பதிவுகளை எதிர்கால சட்ட சட்டை நோக்குகளுக்காகச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

3. எல்லாம் சரிதான்; ஆனால், "பி.கு: இந்தக் கமெண்ட்டை எழுதியவரின் ஐ.பி இதுவென்று சாதாரணமாக மற்றவர்களுக்குத் தெரியவில்லையே. உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் பொய் சொல்லவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று "அறிவுபூர்வமான" கேள்விகள் சிலருக்கு எழலாம். அவர்கள் என்மீது எந்த சட்டபூர்வமான நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். அப்போது ஆதாரங்களை சட்டத்தின்முன் முன்வைக்கிறேன்." என்கிறபோது, சட்டத்தின் முன்னால், காசியின் பதிவுள்ளே புகுந்து விபரங்களை ஒரு சகோவுக்கு காசி தந்திராவிட்டால் திரட்டும் முறைக்கு காசி ஒரு சகோ மீது சட்டப்படி அத்துமீறற்குற்றத்தினைச் சுமத்தமுடியாதோ? ;-) முடியாமலுமிருக்கலாம்; கணித்தொழில்நுட்பமும் நாட்டுச்சட்டமும் ராம்வோச்சரின் சட்டையும் மட்டுமே உலகத்திலே மூன்றேமூன்று பொத்தலும் ஓட்டையும் பொத்தாம்பொதுவாகவுள்ள சமாசாரங்களென்று நினைக்கிறேன் :-)

நன்றி.

3 comments:

Anonymous said...

//பின்னூட்டங்களிலே அநாகரீகமாகவோ நாகரீகமாகவோ எவர் ஒரு சகோவின் கருத்துகளை மறுத்தெழுதினால், அதன் பின்னால், ஒரு சகோவின் "தேவனின் பெயரால் உன்னை மன்னித்துவிடுகிறேன்" என்ற தேவபிரசங்கமும் அதைத் தொடர்ந்து ஓர் அநாமதேயத்தின் அநாகரீகமான சொற்பதங்களுடனுமான பதிவொன்றும் வருவதுண்டு.//

இதை அறிந்து வியந்திருக்கிறோம். இதே நுட்பம் அரவிந்தன் நீலகண்டனின் பதிவிலும் பயன்படுத்தப்படுவது ஒரு விதத்தில் வியப்பை ஏற்படுத்தவில்லை!

-பொன்னார் மேனியன்

Anonymous said...

-/ராமுவாட்சு
"promise-this-is-not-a-spam" என்ற பெயரில் பின்னூட்டமிட்டது நீங்களில்லையா?
.:டைனோ:.

Boston Bala said...

I have to read couple of more times to grasp this post :-)

---காசி ஒரு சகோ மீது சட்டப்படி அத்துமீறற்குற்றத்தினைச் சுமத்தமுடியாதோ---

The technology PKS used might be similar to Google, Altavista kind of search method. I do not know whether Kasi has enabled robots.txt and how to see what are those settings. But these are well documented ways used by search engines to find out.

And btw, the (original) promise-this-is-not-a-spam நீங்கள்தானா :-)