Sunday, October 23, 2005

மறையக்கூடிய நான்காவது பதிவு
---------------------------------------------------------------------------------------------------------------------------------


அங்கங்கே குறித்ததுபோல முன்னைய மூன்று பதிவுகளும் ராம்வோச்சர் விரும்பிக் குறித்ததல்லன, நம்மீது திணிக்கப்பட்டவை. இதன்மூலம் காலவிரயம், உளத்தாக்கம் அப்படியாகத் திணித்தவர்கள், திணித்ததின் மூலம் திரும்பிப் பெற்றுக்கொண்டவர்கள்போல நமக்கும் உண்டு. ஆனால், வலைவாழ்க்கைக்கப்பால், அவர்களின் நாளாந்த -தனிப்பட்ட & தொழில்- வாழ்க்கைகளுக்கு எம் பதிவுகள் சேதம் விளைவிப்பது எந்நிலையிலும் எமது நோக்கமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் மருந்தினைத் தானும் சோதனை செய்யத் தூண்டுவதும் மசாசூசெச்சுடு மசக்கைகள் குறித்த வேண்டாத மனக்கிலேசங்கள் கிறுதிகள் இனியேனும் எவருக்கும் ஏற்படாது தடுக்க முயலுவதுமே எமது நோக்குகளாகும்.

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் நண்பர்களல்லாதவர்களுக்கும் நமது நன்றி. விபரமாக நிலைப்பாடு விளக்கம் கொடுக்க ஆசையிருப்பினும் காலமும் நிலையும் இடம் கொடுக்கவில்லை. தயவுசெய்து புரிந்து கொண்டு மன்னிக்கவும்.

இணையத்திலே ஏற்படும் கருத்துச்சிக்கல்களையும் மலச்சிக்கல்களையும் சண்டையளவிலேகூட உச்சக்கட்டமாக பிரமிள் - வெங்கட் சாமிநாதன் பிணக்கு நிலைவரைக்குமே வைத்திருக்க எப்போதும் முயல்கிறோம் என்பதனை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதெம் அவா. அதற்கப்பாலும் இந்து ராம் - ஈழவேந்தன் பிணக்கென்று சொல்லப்படும் நிலைக்குக் கீழிறங்கவிடுவதில்லையென்பது எமது மாற்றமுடியாத கொள்கை. அதை எப்போதும் எம் தரப்பிற் பேணுவோம்.

முதல் மூன்று பதிவுகளும் அவற்றின் நோக்கங்கள் வேண்டியவளவு வேண்டியவிடங்களிலே நிறைவேறியிருப்பதால், நீக்கப்பட்டிருக்கின்றன.

இந்த தம்நிலைவிளக்கப்பதிவும் நாட்பொழுதில் தன் தேவை நிறைவேற வேண்டிய அவகாசம் கொடுத்த பின்னால் அகற்றப்படும்.

0 comments: