Beyond tsunami: an agenda in action# OR Sorry, My rash is itching again
ஒரு பத்திரிகையின் ஆசிரியர்கருத்து நடுநிலையாக இருக்கவேண்டுமென்று எவரும் எதிர்பார்ப்பதில்லை; குறிப்பாக, அதன் ஆசிரியருக்கு பத்திரிகையாளர் என்பதற்குமப்பால்,அரசியல், தனிப்பட்ட 'நான்' சார்ந்த சொறிதல்கள் இருக்கும்போது. அந்தளவிலே ஒரு நாட்டின் தேசியப்பத்திரிகை என்று சொல்லிக்கொண்டாலுங்கூட, அதன் ஆசிரியர்கருத்துகளைப் புரிந்து கொள்ளவதிலே விபரம் புரிந்தவர்களுக்கு ஏதும் சிக்கல் இருப்பதில்லை.ஆனால், ஆசிரியர்தலையங்கங்களுக்கு நடைமுறைக்குப் புறம்பான பொய்களைச் சொல்ல உரிமையில்லை.
த இந்து பத்திரிகையின் ஆசிரியர் கருத்திலே இருக்கும் சிக்கல் இதுதான்.
[The Hindu]
Tuesday, Jan 25, 2005
Opinion
CALAMITY AND CONFLICT
/
In Sri Lanka, the LTTE is blowing hot and cold over Government relief efforts in the North-East. It oscillates between assertions of independence and the knowledge that it cannot do without Colombo's assistance to overcome the disaster. In order to underline its separateness, the LTTE wants international aid given to it directly. At the same time, the fanatically secretive Pol Potist organisation wants no international scrutiny of its activities, giving rise to fears that it is exploiting the tragedy for its own interests. The recent LTTE criticism of the United Nations Children's Fund for publicising the group's recruitment of child soldiers from among the orphans in the tsunami relief camps is an indicator of the difficulties that lie ahead for relief agencies.
/
முழுதுமுழுதாக பொல்பொட்டினை ஆதரித்த சீனச்சார்புநிலைப்பாடுள்ள, சீனாவின் திபெத்தியமேலாதிக்கத்தினை ஆதரிக்கும் ஒருவர் பொல்பொட்டுவகையறாக்கள் என்று தொடர்ந்து குற்றம் சாட்டுவதைப் பத்திரிகாதர்மம் என்று வாழ்த்தலாம். (எனினும், 1985 இல், இந்தியநலனை விடுதலைப்புலிகள் பிரதிநிதிப்படுத்துவார்கள் என்று ப்ரொண்ட்லைன் ஆசிரியர் கருதியிருக்கக்கூடிய காலகட்டத்திலே அவருடைய விடுதலைப்புலிகள் குறித்த தவறான மார்க்ஸிய-லெனினிய வரையறுப்பை இங்கே காண்க) ஆனால், இந்தப்பத்திரிகை எங்கணுமே மீதிநாட்டுச்செய்தித்தாபனங்களிலே பதிவு செய்யப்பட்ட, இலங்கை அரசின் சுனாமி அநர்த்தத்திலே பாதிக்கப்படோர்களிலே இனரீதியான பாரபட்சமான செயற்பாடுகளைக் குறிக்கவேயில்லை. மாறாக, இலங்கை அரசு நியாயமாகவே (சொல்லப்போனால், வடகிழக்குக்கே அதிகம் சார்பாகச்) செயற்பட்டது என்று காட்ட முயன்றதுதான் மெய் (1). இங்குகூட, எந்தவிதத்திலும் இலங்கை அரசினைப் பற்றி ஏதும் பேச்சில்லை (மாறாக, இந்தோனேசிய அரசினைப் பற்றி அச்சே குறித்துப் பேசுகையிலே பேசுகின்றது).
/
In the unforeseen test of leadership that has come with the tsunami, the leader of the LTTE, Velupillai Prabakaran, already stands exposed for his failure to rally around the people he claims to represent and for remaining in hiding so long after the tragedy struck that it set off speculation about his own fate. It will come as no surprise if he fails to put the basic needs of Tamil people in the North-East before his own.
/
விடுதலைப்புலிகளின் அரசியல்ரீதியான, இராணுவ ரீதியான செயற்பாடுகளைக் குற்றம் சொல்வது ஒன்று; அவர்கள் அப்படியாகவே பொல்பொட்வாதிகள் என்றிருந்தாலுங்கூட, இந்த சுனாமி அநர்த்தத்தின்பின்னான நிவாரணச்செயற்பாட்டிலே அவர்களின் தீவிரமும் அவர்கள் செயற்பட்டவிதமும் உலகம் பரவிச் செய்தித்தாபனங்களினாலே சிலாகித்துச் சொல்லப்பட்ட விடயம் (1, 2, 3, 4). ஆனால், இங்கே த இந்து முழுமையாக இதை இருட்டடிப்புச் செய்துவிட்டுத் தன் கருத்தினை எழுதுகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் (இங்கே குறிப்பிடத்தக்கவிடயமானது, இலங்கைப்பத்திரிகைகள் உட்பட்ட பத்திரிகைகளெல்லாமே பொதுவாக, தமிழ்ப்படுத்திய V. Pirapakaran என்று விடுதலைப்புலிகள் சார்பான இணையத்தளங்களிலே பெயர் எழுதுவதைப் போலவே பதிய, இந்து மட்டும் விடாப்பிடியாக, V. Prabakaran என்ற விதத்திலே விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு நிற்பது; இதுவொரு பெரிய சிக்கலில்லை; ஆனால், இது த இந்துவின் அடிநாதத்தினைச் சுட்ட உதவுகின்றது) தான் உயிரோடு இருப்பதினைக் காட்டாமல் ஒளித்துக்கொண்டதாக எழுதுகின்ற இந்துவுக்கு (கூடவே காண்க), சுநாமி நிகழ்ந்து ஓரிரு நாட்களுள்ளாகவே, வே. பிரபாகரன் அது குறித்த அறிக்கையை விடுத்தது தெரியாமலிருக்கமுடியாது. த இந்துவின் இந்த ஆசிரியர் தலையங்கம் தனிப்பட்ட ஒருவரினது பாதிக்கப்பட்ட 'நான்' இற்கு ஒத்தடம் கொடுத்துக்கொள்ளச் சந்தர்ப்பம் தேர்ந்தெடுத்து எழுதியத குறிப்பாகவே படுகின்றதன்றி வேறில்லை.
Except this post-sunami period, in the past, The Hindu misguided about Mr. Pirapakaran's health two times; during the IPKF's time, it said that he was dead. And, in 2002, Mr. Narasimhan Ram said Mr. Pirapakaran was suffering from an unidntified illness.
இத்தனையும் எழுதும் த இந்து, இலங்கை அரசு சுனாமி நிவாரணத்துக்காக வந்த நிதியினை உல்லாசப்பிரயாணத்துறையினை வளர்க்கப் பயன்படுத்தப்போவது குறித்து, எதுவிதமான கருத்தினையும் தெரிவிக்கவில்லை.
* இ·து ஒரு பத்திரிகையின் செய்தி மீதல்ல்லாது, கருத்துநிலைப்பாடு குறித்த குறிப்பாததால், இங்கே RAMWatch சார்புநிலையிலே கருத்தினைக் குறித்திருக்கின்றது.
# This title was borrowed from The Hindu Opinion, and slightly changed. RAMWatch acknowledges it.
Monday, January 24, 2005
Posted by -/பெயரிலி. at 3:25 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Thanks!
Now everybody knows or atleast few souls know that The Hindu is purposefully working against the welfare of Tamil. But no one dares to spell the possible reason behind that. Why?
prabhakaran எண்டால் என்ன pirabakaran எண்டால் என்ன pirapaharan எண்டால் என்ன? அத்திலை பார்ப்பனபுத்தி கண்டுபிடிக்கின்ற நேரத்தை பத்மநாப ஐயரிடம் சிலவற்றை கற்றுக்கொள்ள செலவிடலாம். றமில்நெற்றில் pirapaharan என்றுதான் பாவிக்கின்றார்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14046
றமில்நெற்றுக்காரர் பார்ப்பன புத்திக்காரரோ?
தங்கமணி! மெத்தச்சரி. ராம் ஒரு பாப்பான் என்று முறசறைந்தாற் போயிற்று. நீயும் ஏன் சுத்திவளைப்பானேன்? பக்கத்தில் போய்ப்பாத்தால் என்.ராம் ஒரு கிரிஸ்துவனானவனென்றும் அவன் நேற்றைய மனையாளும் இன்றைய மனையாளும் கிரிஸ்துவர் என்றும் அறியத்தரும். கிரிஸ்து மதத்துக்கு ஆதரவாய், கத்தோலிக்க குருமார் செய்யும் அசிங்கத்தையெல்லாம் மூடிமறைத்து வைப்பதும் அதிலே தெளிவாகும். அத்தொட்டு, பிரபாகரன் அல்லது ப்ரபாகரன் தான் ஒரு பாப்டிஸ்டு கிரிஸ்துவன் என்று ஊரறிய உண்மையைச் சொல்லிவிட்டால் என் ராம் உடனே தடம் மாறி எல்டிடியீ போல ஒரு நல்ல ஸ்தாபனம் இல்லை என்று ஊரறியச் சொல்லிவிடுவான். உங்களுக்கும் புளகாங்கிதமாய்விடும். சரியா? கூடவே நாகா சோசலிஸ்டு கட்சிக்காரன் நாகாலாந்து பார் கிறைஸ்டு என்று சொல்வது போல பிரபாகரனையும் தமிழ் ஈழம் பார் கிரைஸ்டு என்று உண்மையைச் சொல்லிவிடச்சொல்லும். என் ராம் குண்டு குளிந்து சப்போட்டு செய்ய வந்துவிடுவான்.
Post a Comment