வந்த செய்தியும் வராத செய்திகளும்
எதேச்சையான ஒரு நாளிலே த இந்து நாளிதழிலே இலங்கை பற்றி வரும் செய்திகள், கருத்துகளை இலங்கைத்தமிழர் ஆதரவில்லாத ஊடகங்களோடு ஒத்து பார்த்தால்,
த இந்து
31 August 2005
U.N. envoy to visit Sri Lanka
V.S. Sambandan
COLOMBO: Lakhdar Brahimi, special adviser to U.N. Secretary-General Kofi Annan, is scheduled to visit Sri Lanka shortly. The visit is in the aftermath of the assassination of Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar on August 12.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிபிசி தமிழோசை
30 August 2005
புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதித் தாக்குதலில் ஒருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வாகரைப் பிரதேசத்தில் இன்று காலை 7.30 மணியளவில் உழவு இயந்திரத்தில் பயணம் செய்துகொண்டிருந்த விடுதலைப் புலிகள் மீது அடையாளந் தெரியாத நபர்கள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
விடுதலைப் புலிகளின் முன்னணி காவல் நிலையப் பிரதேசத்தை அண்மித்த கிரிமிச்சையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், தாக்குதலை நடத்தியவர்கள் கைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் இது பற்றி வெளியாகியுள்ள தகவல்கள் மூலம் தெரிகின்றது.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் அந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
கண்காணிப்பாளர்கள் தகவலின் படி இந்த தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப்புலி உறுப்பினரொருவர் கொல்லப்பட்டுள்ளார்; அந்த அமைப்புடன் தொடர்புடைய மேலும் மூவர் காயமடைந்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினர், இராணுவத்துடன் இணைந்து செய்ல்படும் குழுவினர் இராணுவ உதவியுடன் இதனை நடத்தியுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் அருகிலுள்ள இராணுவ முகாமை நோக்கி தப்பிச் சென்றுள்ளார்கள் என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆனால் இச்சம்பவத்துடன் தங்களை தொடர்புபடுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டை இராணுவத்தரப்பு முற்றாக மறுத்துள்ளது.
இம்மாதம் இலங்கை அரசு-விடுதலைப்புலிகள் இருதரப்பும் போர்நிறுத்த செயல்பாடுகளை மீளாய்வு செய்யும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று ஏற்றுக்கொண்டதை அடுத்து விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் தாக்குதல் நடந்துள்ளதாக செய்தி வந்திருக்கும் முதல் சம்பவம் இது.
--------------------------------------------------------------------------------
"சுடரொளி" செய்தியாளர் இருவர் மீது தாக்குதல்
"சுடரொளி" பத்திரிகையின் இரண்டு செய்தியாளர்கள் இன்று கொழும்பில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பத்திரிகைக்கு பாராளுமன்றச் செய்தியாளர்களாகப் பணியாற்றும் ஆறுமுகம் வரதராஜா மற்றும் புத்திரசிகாமணி ஆகியோரே இன்று தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் கே.கே. இரத்தினசிங்கம் தெரிவித்தார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள இந்த பத்திரிகையின் தலைமை அலுவலகத்தின் மீது நேற்று இனந்தெரியாதவர்கள் கைக்குண்டை வீசியதில் காவலாளி ஒருவர் கொல்லப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இரத்தினசிங்கம் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
அநுராதபுரியின் புனித வெள்ளரசு மரம் மக்கள் தரிசனத்துக்கு
இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரச மரத்தைப் பார்ப்பதற்காகப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, கடந்த ஒரு வாரகாலமாக மக்கள் வெள்ளம் அங்கு அலைமோதுகின்றது.
எண்பது வருடங்களுக்குப் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நாடெங்கிலும் இருந்து பௌத்தர்கள் அநுராதபுரத்திற்குப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
எங்கு நோக்கினும் வெண்ணிற ஆடையணிந்த பக்தர்களே அதிகமாகக் காணப்பட்டனர்.
புனித வெள்ளரசுமரம் அமைந்துள்ள புனிதநகரப் பிரதேசத்தில் சுமார் 4, 5 கிலோ மீற்றர் தொலைவிற்கு வளைந்து நெளிந்து நிற்கும் நீண்ட கியூ வரிசையில் மக்கள் காத்திருக்கின்றார்கள்.
தங்க முலாம் பூசப்பட்ட வேலியின் அடைப்புக்குள் புனிதமாக வைக்கப்பட்டுள்ள வெள்ளரசு மரத்தினைப் பார்ப்பதற்கு அதன் புனிதத்துவம் கருதி எவருக்கும் இலகுவில் அனுமதி வழங்கப்படமாட்டாது.
இராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் மாத்திரமே தரிசித்த இந்தப் புனித வெள்ளரசு 3 ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதீசன் என்ற மன்னன் அநுராதபுரத்தை ஆண்ட காலத்தில் இந்தியாவை ஆண்ட அசோகச் சக்கரவர்த்தியின் மகளாகிய சங்கமித்தை என்னும் பிக்குனியினால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது வரலாறு.
விசேடமாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மேடைகளில் ஏறிச்சென்று பக்தர்கள் புனித வெள்ளரசைப் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
தங்க சரிகை வேலைப்பாடு கொண்ட பட்டும், மஞ்சள் அங்கியும் போர்த்தப்பட்ட அரச மரக்கிளையை விசேடமாக நிறுத்தப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் கையிலேந்தியிருக்கும் மலரினால் சுட்டிக்காட்ட, மலர்களையும் காணிக்கையையும் செலுத்தி பக்தர்கள் அதனை வணங்கிச் செல்கின்றார்கள்.
கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பத்து மணித்தியாலங்களுக்கு மேலாக பக்தர்கள் புனித தரிசனத்திற்காகக் வரிசையில் காத்திருக்கின்றார்கள்.
அநுராதபுரம் புனித வெள்ளரசு மரக்கிளையுள்ள பகுதியின் தலைமை பிக்குவாக இருப்பவர் அட்டமஸ்தானாதிபதி ஆச்சார்ய பள்ளேகல சிறிநிவாச நாயக்க தேரர்.
அவர் இந்த ஒருவார கால நிகழ்வு பற்றி கூறுகையில், புனித போதிமரத்தைப் பல வருடங்களுக்குப் பின்னர் பொதுமக்கள் தரிசிப்பதற்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; மன்னன் தேவநம்பியதீசன் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தப் புனித அரசமரக்கிளையானது வெண்ணிறக் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் வெண்ணுடை தரித்த மக்கள் திரண்டு நின்று வணங்க, ஊர்வலமாக இங்கு கொண்டு வரப்பட்டது; அதேபோன்றதொரு காட்சியை இப்போது நாங்கள் காணக்கூடியதாக உள்ளது; இந்தப் புனித வெள்ளரசைப் பொதுமக்கள் தரிசித்ததன் மூலம் நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் நாட்டில் அமைதியும் கிட்டும் என்று நம்புகிறோம் என கூறினார்.
வாழ்க்கையில் அரிதாகக் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள் சிலர் புனித வெள்ளரசைத் தரிசிப்பதற்கு கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை ஒரு பெரும் பேறாக கருதுவதாகவும், நீண்ட காலத்திற்குப் பின்னர் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பம் உண்மையிலேயே நன்மையானது என்றும், இத்தகைய சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறினர்.
======================================================
கடந்த ஒரு கிழமையாக கொழும்பிலேயிருக்கும் சுடரொளி பத்திரிகை சம்பந்தப்பட்ட தொழிலகம், பத்திரிகையாளர் என்பவர்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்து வருகின்றது.
கீழே காண்பவை அவை குறித்த செய்திகள்:
1. August 20, 2005 12:56 GMT: Advertising office of Colombo Tamil daily attacked: Source: TamilNet
2. August 23, 2005 16:34 GMT: Tamil journalist in Colombo assaulted by JVP, arrested under ER: Source: TamilNet
3. August 29, 2005 15:34 GMT: Colombo Tamil daily bombed, one dead, three injured: Source: TamilNet
August 29, 2005 15:43 GMT: Sudaroli under grenade attack: Source: BBC
4. August 30, 2005 14:59 GMT: Sudaroli journalists assaulted again: Source: BBC
கொழும்பிலே தொடர்ந்து நிகழும் இந்நிகழ்வுகள் குறித்து த இந்து ஏதேனும் பத்திரிகைச்சுதந்திரம் பற்றி ஏதேனும் தெரிவித்திருக்கின்றதா? ஆனால், இதே த இந்து கதிர்காமர் கொலையின் அதேநாளிலே கொல்லப்பட்ட இருவரான ஒலிபரப்பாளர் ரேலங்கியும் அவருடைய கணவர் செல்வராஜாவும் கொலைசெய்யப்பட்டபோது, விடுதலைப்புலிகளென எதுவிதமான ஆதாரமுமின்றிக் கருத்துத் தந்ததைக் கவனிக்கவேண்டும். இன்னமும், விடுதலைப்புலிகள் முன்னைய வெளிவிவகார அமைச்சர், லக்ஸ்மண் கதிர்காமரைக் கொன்றதாகத் திட்டவட்டமாகச் செய்திகளும் கருத்துகளும் வெளியிட்ட இதே பத்திரிகை இன்றைய செய்தியிலே "after the assassination of Kadirgamar by a suspected LTTE sniper" என எழுதியிருக்கின்றது. இதிலே குறிப்பிடவேண்டிய அம்சமென்னவெனில், இலங்கையின் வெடியாய்வுப்புலனாய்வுத்துறையே நிராகரித்துவிட்ட "தொலையிருந்து குறிசுடு" கொலைக்கருத்தினை இன்னமும் இதன் செய்தியாளர் பிடித்துக்கொண்டிருப்பதே.
இதுதவிர, கொழும்பிலேயும் கிழக்கிலேயும் கடத்திக்கொண்டுபோய்க் கொல்லப்படும் ஆயுதம்தாங்காத இளைஞர்கள் குறித்தும் எதுவிதமான செய்தியோ கருத்துக்கூறலோ இந்து பத்திரிகையிலே வருவதை ராம்வோச்சர் இதுவரை காணவில்லை.
இந்தக்கொலை குறித்த கீழ்க்காணும் நான்கு செய்திகளும் ஒன்றாகப் பார்க்கும்போது கொழும்பு நிலை மிகவும் பயமூட்டுவதாகவும் பயங்கரமாகவும் உள்ளது. ஆனால், இது குறித்து இந்தியப்பத்திரிகைகளும் எதையும் பேசக்காணோம்; இலங்கையரசும் நடவடிக்கையேதும் எடுக்கக்காணோம்
1.
Asia Tribune: A Tamil para-military group arrested two LTTE operatives.
Colombo, 28 August, (Asiantribune.com): A Tamil para-military group has claimed that they have arrested two LTTE killer squad operatives, namely Kandiah Sasikumar (22) and Kathamuthu Nallathamby 40, on Thursday at the Katunayake international airport, while they were waiting for their prey - the arrival of six ENDLF cadres from Chennai.
2.
TamilNet:Two men from Batticaloa kidnapped in Colombo
[TamilNet August 26, 2005 21:58 GMT]
Unidentified persons riding a white van without number-plate kidnapped two civilians from Batticaloa in Colombo Thursday night around 11:00 p.m. The victims, Mr. Kandiah Sasikumar, 22 and Mr. Kathamuthu Nallathamby, 40, were kidnapped on Colombo-Negombo road when they were on their way from Banadaranaike International Airport with their relatives who had come from abroad, sources said.
3.
TamilNet:Bodies with gunshot injuries recovered in Kalutara
[TamilNet, August 29, 2005 05:14 GMT]
Bodies of two youths with gunshot injuries were found in the shrub jungle close to Arupola Kanda in Thepuwana in Kalutara district, south of Colombo. The victims were about five feet and six inches in height and were wearing denim trousers and colored shirts, Thepuwana Police said.
4.
நிதர்சனம்
நிதர்சனம் கூறியிருப்பதிலே கொல்லப்பட்டது குறித்த செய்தியைமட்டுமே கருத்திலெடுக்கவேண்டியதாக இருக்கின்றது. மீதியானவை ஊகங்கள் அடங்கிய கருத்தாகவுமிருக்கலாம்.
7 comments:
இந்த வாரம் தவணையாக இன்று 'இந்து' எழுதியுள்ள தலையங்கத்தையும் பாருங்கள். இலங்கை அரசுடன் 'இந்து' ஏதேனும் ஒப்பந்தம் செய்துள்ளதோ, வாரம் ஒரு புலி எதிர்ப்புத் தலையங்கம் எழுதவென்று?
இது குறித்தாவது போடுகிறார்களா என்று பாருங்கள்.
பிபிஸி தமிழோசை புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 ஆகஸ்ட், 2005 - பிரசுர நேரம் 15:57 ஜிஎம்டி
செய்தியரங்கத்தில்
பிரேமதாச கொலைச் சந்தேக நபர்கள் 21 பேர் விடுதலை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கின் 21 சந்தேக நபர்களையும் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அன்று, மே தின ஊர்வலம் ஒன்றின் போது கொழும்பு ஆமர் வீதிச் சந்தியில் வைத்து அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸ அவர்கள் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்த 21 பேர் மீதும் குற்றஞ்சாட்ட போதிய சாட்சியங்கள் எதுவும் கிடையாது என்று குற்றப்புலனாய்வுத் துறையினர் சமர்ப்பித்த அறிக்கையை அடுத்தே அவர்களைத் தற்போது விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர், ஏனைய அனைவரும் தமிழர்களாவர்.
இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான புலனாய்வுகள் சரியாக நடக்கவில்லை என்றும், குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க தற்போதைய அரசு உறுதியான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்றும் பிரேமதாஸ அவர்களின் புதல்வரும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறிய விடயங்களுக்கெல்லாம் ஆணைக்குழுக்களை அமைக்கும் ஜனாதிபதி இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழு எதனையும் அமைக்கவில்லை என்றும் அவர் குறை கூறியுள்ளார்.
திரு. கொண்டோடி: தங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் கருத்தினை முழுக்க முழுக்க ராம்வோச் ஒப்புக்கொள்கின்றது. அதன் காரணமாகவேதான், நிதர்சனம் இணைப்பின் கருத்துகள் ராம்வோச்சிலே உள்ளிடப்படவில்லை. அதன் நம்பகமில்லாத்தன்மையினைக் குறிக்கும்விதமாக, ராம்வோச் ஒரு மறுப்புக்கூற்றினையும் இணைத்திருந்தது. ஆயினும் குறிப்பிட்ட இருவரின் இறப்புகளைக் குறித்த செய்தியை அது தந்திருப்பதால், அச்செய்தியினைச் சுட்டமட்டுமே ராம்வோச் நிதர்சனம்.கொம் இன் செய்திக்கு இணைப்பினைக் கொடுத்திருந்தது.
திரு. சுந்தரமூர்த்தி: தகுந்த சமயத்திலே ராம்வோச்சினாலே விட்டுப்போன த இந்துவின் கருத்தினைச் சுட்டியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி. இக்குறிப்பிட்ட பதிவுக்கு அந்த இணைப்பு மேலும் வலுவூட்டுகின்றது.
ராம்வோச்சர்
பதிவுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி.
http://www.nitharsanam.com/?art=11522
ராம் வோச்சர்,
நீங்கள் தமிழை விட முக்கியமாக ஆங்கிலத்தில், இந்த விஷயங்களை இன்னும் விரிவாக, இதன் அரசியல்களை விவரித்து எழுத வேண்டும் என்பது என் கருத்து. இந்து , ஃபரண்ட் லைன் மட்டுமில்லாமல், மற்ற (இந்திய) ஆங்கில பத்திரிகைகளும் ஒரு தலை பட்சமாகவே இருகின்றது. ஓரளவு திறந்த மனப்பான்மையுடன் இருக்கும் இடது சாரி சிந்தனையாளர்களின் கருத்தும் ஒருதலை பட்சமாகவே இருக்கிறது. அதனால்...
ரோசா வசந்த் நீங்கள் பரிந்துரைப்பதுபோலவே முயற்சி செய்கிறோம்
ராம்வோச்சர்
Post a Comment