Wednesday, August 03, 2005

நியாயமான முனைப்பினைத் தேடுதல்

த இந்துவின் கருத்துக்களத்திலே 2 ஓகத்து 2005 அன்று ஐரிசு குடியரசு இராணுவத்தின் புதிய நிலைப்பாட்டினைக் குறித்து ஒரு பத்தி எழுதப்பட்டிருக்கின்றது.

-- உள்நுழைப்பு-------------

|The Hindu|
Opinion
2, August 2005
IRA in a reasonable mode

....The IRA decision is a message to armed insurgencies everywhere. While extremist violence may serve to highlight the existence of a societal problem, it soon becomes the problem in itself, as the continuing brutish ways of the Liberation Tigers of Tamil Eelam demonstrate. The group suspended its military campaign against the Sri Lankan government after a ceasefire in February 2002 but its decision to keep open the option of armed struggle, and to this end, build on its military strength by smuggling in weapons and other means of war, including material for a nascent air force, is 90 per cent of the reason for the Sri Lankan peace process not taking off. On the strength of its weapons and fighting capabilities, the LTTE has established a regime of terror in North-East Sri Lanka. It continues to recruit children as fighters, extorts `taxes,' and intimidates and liquidates opponents. Unfortunately, there is insufficient international pressure on the LTTE to abandon the path of violence. Those within the Sri Lankan Tamil community demanding an end to the killings and counter-killings are discouraged by peace facilitator Norway's indulgent attitude to the LTTE. But there is no escaping the fact that unless the Tigers change their stripes, Sri Lanka's search for an enduring peace will remain unsuccessful.

-- உள்நுழைப்பின் முடிவு -------

தனது வழக்கம்போல தி இந்து இக்கருத்துப்பத்தியின் கடைசிப்பந்தியினை இலங்கையின் இனச்சிக்கல் தீர்க்கப்படாமலே இருப்பதற்கு விடுதலைப்புலிகள்தான் காரணமெனச் சாடியிருக்கின்றது - குறிப்பாக, 90% காரணமெனச் சாடியிருக்கின்றது. இந்தப்புள்ளிவிபரத்தினை எந்தவகையிலே அளவிட்டுத் தந்திருக்கின்றதென்பதை த இந்து சுட்டவில்லை. இன்னும், (குறைந்தபட்சம், ராம்வோச்சருக்கு அறிந்த அளவிலே) சடத்துவநிலையிலே ஆதாரத்துடன் நிறுவப்படாத விடுதலைப்புலிகளின் விமானங்கள் என்ற கருத்தினைத் திரும்பத் திரும்பச் சொல்லி, இன்றைய இலங்கைப்பிரச்சனையின் இழுபறிநிலைக்கு விடுதலைப்புலிகளே காரணமென்று சுட்டிக்கொண்டிருக்கின்றது.

தாம் கவலைப்படுவதாகக்காட்டிக்கொள்ளும் சாதாரண மக்களோடு நின்று எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தினையேனும் ஆதாரமாகக் காட்டமுடியாத தனிமனிதர்களான ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரைத் ஈழத்தமிழர்களின் முழுப்பிரதிநிதிகளென முன்னிலைப்படுத்தும் த இந்து, குறைந்தபட்சம் படங்களிலேனும் அருகிருந்து காணப்படும் தமிழ்த்தேசியக்கூட்டணியினை விடுதலைப்புலிகளின் பொம்மைகள் என்பதாகப் போகின்ற போக்கிலே சொல்லி, அவர்கள் தமிழ்மக்களின் பிரதிநிதிகளில்லை என்று நிறுவமுயலும் "நேர்மை"யினைக் கொண்டதாதலால், மேற்படி பத்தி ஆச்சரியத்தினை ஏற்படுத்தவில்லை.

ஆனால், இங்கே வசதியோடு த இந்து விட்டுவிட்ட, ஆனால், ஆதாரங்களுடன் நிறுவப்பட்ட சிலவற்றினையும் சுட்டியிருக்கலாம். உதாரணங்களுக்குச் சில:

1. த இந்துவின் ஆசிரியர் அங்கம் வகுக்கும் இந்திய மார்க்ஸியக்கட்சிகள் தோழமை மார்க்ஸியக்கட்சிகள் என அழைத்துக்கொண்ட அதிசிங்களதேசியவாதக்கூறான ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) இலங்கையின் இடைக்காலத்திட்டத்தினையேனும் நடைமுறைப்படுத்த விடாது, புலிகளுடன் பேச்சே வேண்டாமென்றும் நோர்வேயினை நடுவராக இருக்கவேண்டாமென்றும் அடாவடித்தனம் பண்ணுவது குறித்துக் கடிந்திருக்கலாம்

2. கிழக்கிலங்கையிலே விடுதலைப்புலிகளைக் கொல்லும் நடவடிக்கைகளிலே ஈடுபடுகின்றவர்களுக்கு உதவி புரிகின்ற வகையிலே (இன்னும் முழுமையாக ஆதாரப்படுத்தப்படாத மறைமுகமான இலங்கை இராணுவத்தின் ஆயுத நடவடிக்கைகளை, உதவியினைக்கூட இங்கே விட்டுவிடுவோம்), சீண்டும் தன்மையுடன் இலங்கை இராணுவக்கட்டுப்பாட்டுப்பிரதேசத்துள்ளே விடுதலைப்புலிகள் போகவரப் பாதுகாப்பினை மறுத்துச் சீண்டும் தன்மையைச் சுட்டிக்காட்டியிருக்கலாம்

3. ஈழத்தமிழர்களின் பாரம்பரியப்பிரதேசத்திலே, வேண்டுமென்றே புத்தர்சிலைகளை அமைத்து நிலைமையைச் சீர்கெடுக்கும் இலங்கை அரசின், இராணுவத்தின், சில சிங்களப்பேரினவாதிகளின் செயற்பாடுகள் குறித்துப் பேசலாம்

4. த இந்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டுமென்று சுட்டுகின்றபோதிலே, விடுதலைப்புலிகளைச் சீண்டும்விதமாக, இந்திய அரசும் இராணுவமும் இலங்கை விமானப்படைக்குப் பயிற்சியளிப்பதும் இராணுவ உபகரணங்கள் வழங்குவதும் இன்னமும் இரு நாடுகளுக்கிடையிலே இராணுவ ஒப்பந்தம் பண்ணுவது குறித்தும் பேசலாம்

5. கொலைகள் குறித்து எழுதப்படும்போது, சென்னையிலிருந்து பெங்களூர் ஓடியதற்கே ஒப்பாரி வைத்து கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது குறித்துக்கவலைப்படும் தம் ஆசிரியர் குழுவினை ஒத்த சக பத்திரிகையாளர்கள் இலங்கையிலே கொல்லப்பட்டது குறித்தேனும் நியாயமான உண்மைக்கு மாற்றில்லாத தகவல்களைத் தர த இந்து முனையலாம்

இப்படியாக எத்தனையோ கருத்துகளைச் சுட்டி, இலங்கையின் சமாதான முயற்சிகள் சீரழிவது குறித்து த இந்து பேசியிருந்தால், வரவேற்புக்குரியதாகும்; கூடவே, த இந்துவின் கருத்துகளை வாசகர் ஒருவர் பத்திரிகைநேர்மை பொதிந்ததென ஏறெடுத்துப்பார்க்கக்கூடும். ஆனால், சென்னையிலிருக்கும் இலங்கையின் துணைத்தூதர் சிறப்புவிருந்தினராக இருக்க த இந்துவின் உதவி ஆசிரியர் கட்டுரை வாசிக்க, த இந்துவின் பத்தியாளர் சூரியநாராயணன் தலைமைதாங்கி, "சேதுச் சமுத்திரத்திட்டத்தின் நோக்கங்களில் கடற்புலிகளின் நடமாட்டத்தினைக் குறைத்தலுமொன்று" என்று கூட்டம், நடத்த அதைப் பதியும் இந்தியாவின் தேசியப்பத்திரிகையான த இந்துவிலே "IRA in a reasonable mode" என்பதிலே ஈழம் பற்றிக் கூறப்பட்ட கருத்துகளை மட்டுமே நாம் எதிர்பார்க்கலாம்.

11 comments:

Anonymous said...

danke!

Anonymous said...

funny letters?

Anonymous said...

Gr8 raging riot Warmatach

SnackDragon said...

தகவல்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Anonymous said...

kudos to the gr8 analysis

இளங்கோ-டிசே said...

அவசியமான பதிவு.

Anonymous said...

//But there is no escaping the fact //

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்து சொல்வதுதான் fact என்று சொல்லிக்கொண்டிருக்கப்போகிறது!

இங்கிலாந்து அரசு (டோனி)அயர்லாந்து பிரச்சனை குறித்த தனது முடிவை (தீர்வை) உறுதியாக அறிவித்ததுபோன்று இலங்கை அரசும், கட்சிகளும் உறுதியாக தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கமுடியுமா? ஏன் இத்தனை காலமும் அதைக் கூடச் செய்யவில்லை?

மு. சுந்தரமூர்த்தி said...
This comment has been removed by a blog administrator.
மு. சுந்தரமூர்த்தி said...

என். ராம் அதிபுத்திசாலிதான். வாசகர்களைத் தான் முட்டாள்களாக நினைக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது. தப்பித் தவறி இலங்கை இரண்டாக உடைந்து ஈழம் என்று ஒன்று அமைந்துவிட்டால் முதலில் கடலில் குதித்துத் தற்கொலை செய்துக்கொள்பவர் இவராகத் தான் இருக்கக்கூடும். அந்த அளவுக்கு அவரில் இலங்கை தேசியப் பற்று ஊறிவிட்டிருக்கிறது.

2005ல் IRA எடுத்துள்ள முடிவை சிலாகிக்கும் ராம் விடுதலைப் புலிகளும் அப்படியே செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நல்லது. கூடவே தன் நண்பி சந்திரிகாவுக்கும் 1998 இல் கையெழுத்திடப்பட்ட Good Friday ஒப்பந்தம் குறித்து சொல்லி உபதேசமும், அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கப் பெரியண்ணன் உதவிய மாதிரி, இங்கு இந்தியப் பெரியண்ணனும் ஏதாவது செய்யலாம் என்று ஆலோசனையும் கொடுக்கலாமே.

சுனாமி சீராமைப்புப் பணிகளில் புலிகளை சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று மார்க்சிஸ்டு JVP தொடுத்த வழக்கில் அதற்கு சாதகமாக இலங்கை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு (வேறெப்படிப்பட்ட தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்?) இந்த மனிதாபிமான மார்க்சிஸ்டுக்கு ஏற்படுத்தியுள்ள குஷியைப் பாருங்கள். அடிபட்ட மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா இல்லையா என்று கவலையில்லை. புலிகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. அது தான் முக்கியம். "மகஞ் செத்தாலும் பரவாயில்ல. மருமக தாலியறுத்தா போதும்"னு சொல்லுவாங்களே, அந்த மாமியாருக்கு நல்ல உதாரணம் நம்ம மார்க்சிஸ்ட் மாமா தான்.

திபெத்தை விட்டு சீனா வெளியேற வேண்டும் என்று ஆயுதம் ஏந்தாமல் போராடி வரும் திபெத்தியரைப் பாராட்டி மட்டும் தலையங்கம் தீட்ட மனம் வராது இந்த அமைதி விரும்பிக்கு. சும்மா சொல்லக்கூடாது, மாமா கொள்கைப் பிடிப்புள்ள மார்க்சிஸ்ட் தான்.

Anonymous said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.
இது குறித்து, கரிகாலனும் தினக்குரல் ஆசிரியர் தலையங்கத்தினை இட்டிருக்கின்றார்.

RamWatcher

Anonymous said...

Ask the hindu editor read frontline
http://www.frontlineonnet.com/fl2216/stories/20050812001105500.htm